

அத்தியாவசிய பொருட்கள் விலையேற்றம்
டெல்லி, மும்பை, கொல்கத்தா போன்ற பிற முக்கிய நகரங்களை விடச் சென்னையில் அரிசி, கோதுமை மற்றும் சில அத்தியாவசியக் காய்கறிகளின் விலைகள் கடுமையாக உயர்ந்து குடும்ப பட்ஜெட்டைப் பாதித்துள்ளது.
சென்னையில் அரிசி விலை ரூ.80
மத்திய நுகர்வோர் நலத்துறை தரவுகளின்படி, அக்டோபர் 28 அன்று சென்னையில் ஒரு கிலோ அரிசியின் விலை 80 ரூபாய். டெல்லியில் 47 ரூபாய்க்கும், மும்பையில் 44 ரூபாய்க்கும் கொல்கத்தாவில் 59 ரூபாய்க்கும் ஒரு கிலோ அரிசி விற்கப்படுகிறது.
கோதுமை கிலோ ரூ. 47
கோதுமை விலை சென்னயில் கிலோ 47 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
டெல்லி மற்றும் மும்பையில் முறையே 34 மற்றும் 44 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
கோதுமை மாவு சென்னையில் கிலோ 42 ரூபாய்க்கு விற்கப்படும் நிலையில் டெல்லியில் 35 ரூபாய், மும்பையில் 48 ரூபாய் மற்றும் கொல்கத்தாவில் 39 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
வெங்காயம் கிலோ 70 ரூபாய்
வெங்காயம் கிலோ 70 ரூபாய்க்குச் சென்னையில் விற்கப்படுகிறது. அதே நேரம் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை டெல்லி மற்றும் மும்பையில் 50 ரூபாயாகவும், கொல்கத்தாவில் 70 ரூபாயாகவும் உள்ளது.
தக்காளி விலை ரூ.50
சமையலில் அதிகளவில் பயன்படுத்தப்படும் தக்காளி சென்னையில் கிலோ 50 ரூபாய்க்கு விற்கப்படும் நிலையில் டெல்லியில் 37 ரூபாய்க்கும் மும்பையில் 24 ரூபாய்க்கும் கொல்கத்தாவில் 40 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
பருப்பு விலை சென்னையில் குறைவு
சர்க்கரை, பருப்புகள் மற்றும் எண்ணெய்கள் ஆகியவற்றின் விலையோ மற்ற மூன்று நகரங்களைவிட சென்னையில் குறைவாக உள்ளது.
குறுவைச் சாகுபடி குறைந்தது, அண்டை மாநிலங்களில் இருந்து வரத்து பாதிக்கப்பட்டதே சென்னையில் அரிசி விலை உயரக் காரணமாகக் கூறப்படுகிறது.
போக்குவரத்து மற்றும் கூலிச் செலவுகள் அதிகரித்துள்ளதால் கோதுமை மற்றும் பிற பொருட்கள் விலை சென்னையில் அதிகரித்துள்ளது.
இந்த விலையேற்றம் சாமான்ய மக்களை வெகுவாக பாதித்துள்ளது. வேலைக்கு செல்வோரின் மாதாந்திர பட்ஜெட்டும் எகிறி வருகிறது.
=====================