தபால் மூலம் வாக்கு
Election Commission on Postal Vote for 2026 Assembly Elections : வருகிற 2026 ம் ஆண்டிற்கான சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தலில் இந்திய தேர்தல் ஆணையம் 85 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் 40 சதவீதத்திற்கும் மேற்பட்ட வரையறுக்கப்பட்ட மாற்றுத்திறன் கொண்ட மாற்றுத்திறனாளிகள் தங்களது வீட்டிலிருந்தபடியே வாக்களிக்கும் வசதியை வழங்கியுள்ளது.
தபால் வாக்கு எவ்வாறு செலுத்துவது
இந்த தபால் வாக்கு செலுத்தும் தகுதி உள்ள நபர்கள் படிவம் 12D (Form 12D) ஐ சமர்ப்பித்து வீட்டிலிருந்து வாக்களிக்கும் விருப்பத்தை தெரிவிப்பவர்களுக்கு படிவம் 12D வழங்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது அதனை பின்பற்றி விண்ணப்பித்து கொள்ளுமாறு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது
நேரடியாக BLO மூலம் விண்ணப்பிக்கலம்
தகுதியுள்ள 85 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் 40 சதவீதத்திற்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் ஆகியோரின் வீட்டிற்கு வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLO) நேரடியாகச் சென்று படிவம் 12D-ஐ வழங்குவார்கள் என்றும் அதேப்போல நிரப்பப்பட்ட படிவத்தையும் வீட்டிற்கே வந்து பெற்று கொள்ளவர்கள் என்றும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது
உரிய காலத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும்
பூர்த்தி செய்யப்பட்ட படிவம் 12D -ஐ ஏப்ரல் மாதம் 4ஆம் தேதிக்குள் திரும்ப வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும் அப்போதே அது ஏற்றுக்கொள்ளப்படும் தபால் வாக்காக கருதப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துளளது.
மேலும் படிக்க : சட்டமன்ற தேர்தல் : தபால் வாக்குப் பதிவு : கூடுதலாக ஐந்து துறைகள், தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
கட்டணமில்லா தொலைபேசி எண்களையும் தொடர்பு கொள்ளலாம்
தேர்தல் அலுவலரின் கட்டுப்பாட்டு அறை கட்டணமில்லா தொலைபேசி எண், 1800 425 7012 -ஐ தொடர்பு கொள்ளலாம். இது 12D படிவம் வழங்கவும் அதற்கான வழிகாட்டு பின்பற்றுதல்களையும் வழங்கும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துளளது