சட்டமன்ற தேர்தல் : தபால் வாக்குப் பதிவு : கூடுதலாக ஐந்து துறைகள், தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

Postal Vote 2026 : தமிழகத்தில் வருகிற 23 ம் தேதி சட்டமன்ற தேர்தலானது நடைபெற இருக்கும் நிலையில் ,யாரெல்லம் தபால் மூலம் வாக்குப்பதிவு செலுத்தலாம் என்ற அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது
Assembly Elections 2026 : Postal Voting; Election Commission makes important announcement
Assembly Elections 2026 : Postal Voting; Election Commission makes important announcement google
1 min read

சட்டமன்ற தேர்தல் 2026

EC Announcement on Postal Vote 2026 : 2026 ஆம் ஆண்டிற்கான சட்டமனற்ற தேர்தல் வருகிற 23 ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது .ஒரே கட்டமாக நடைபெறும் தேர்தலில் வாக்கு முடிவின் அறிவிப்பு மே 4 ம் தேதி வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

தபால் வாக்குப்பதிவு ; தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951-ன் பிரிவு 60(c)-ன் படி, 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் மற்றும் வாக்காளர் பட்டியலில் மாற்றுத்திறனாளிகள் (PwDs) என அடையாளப்படுத்தப்பட்டவர்கள் தங்களின் வாக்குகளை தபால் வாக்கு மூலம் செலுத்தலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மேலும் தேர்தல் தேதியன்று அத்தியாவசியப் பணிகளில் தங்களை ஈடுபடுத்திருக்கும் வாக்காளர்கள் , தங்கள் துறையின் நியமிக்கப்பட்ட ஒருங்கிணைப்பு அலுவலர் (Nodal Officer) மூலம் தபால் வாக்கு வசதிக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் ஆணையம் அறிவித்துள்ளது

வேறு எந்த துறையில் பணிபுரிபவர்கள் தபால் வாக்கு செலுத்தலாம்

சுகாதாரம், மின்சாரம், போக்குவரத்து, ஆம்புலன்ஸ் சேவைகள், விமான போக்குவரத்து மற்றும் தீயணைப்புத் துறை, அரசு சாலைப் போக்குவரத்துக் கழகங்கள் போன்ற துறையில் இருப்பவர்கள் இந்த வாக்கு பதிவு முறையினை பயன்படுத்தி கொள்ளாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது .

செய்திக் சேகரிப்பிற்காக தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஊடகவியலாளர்களும் அத்தியாவசியப் பணிகளில் உள்ள 'வராத வாக்காளர்கள்'(Absentee voters) பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதனால் அவர்களும் தபால் ஓட்டு செலுத்தலாம் என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது

தபால் வாக்கு செலுத்துவது எப்படி?

தபால் செலுத்தும் வாக்காளர்கள் , வாக்காளர்கள் படிவம் 12D (Form 12 D)-ஐப் பயன்படுத்தி, தேர்தல் அறிவிக்கை வெளியான 5 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட BLO (வாக்குச்சாவடி நிலை அலுவலர்) மூலம் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் (RO) சமர்ப்பிக்க வேண்டும் என் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in