From Vijay to C. Vijayabaskar: Re-polling for by-elections in 6 constituencies across Tamil Nadu.  google
தமிழ்நாடு

"விஜய் முதல் , சி.விஜயபாஸ்கர் வரை" தமிழகத்தில் 6 தொகுதிகளுக்கு மீண்டும் இடைத்தேர்தல் ...

சி.விஜயபாஸ்கர் ராஜினாமாவைத் தொடர்ந்து, காலியாக இருக்கும் தொகுதிகள் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

Rohini

அதிமுக : கட்சி பிளவு ,விலகும் அதிமுகவினர்

சட்டமன்ற தேர்தலில் அதிமுக 47 தொகுதிகளில் வெற்றி பெற்றிந்த்து , இந்த நிலையில் தேர்தல் தோல்விக்கு பிறகு உட்கட்சி பூசல் வெடிக்க, 25 எம்எல்ஏக்கள் தவெகவிற்கு ஆதரித்து வாக்களித்தனர். 22 பேர் எதிர்ப்பு வாக்கு செலுத்தினர்.

இந்த நிலையில் 21 எம்எல்ஏக்கள் எடப்பாடி அணி பக்கமும் நான்கு எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைந்தனர் இது அதிமுகவிற்கு கடும் சிக்கலை ஏற்படுத்தியிருந்த்து , குறிப்பாக அர்சியல் வட்டாரங்களில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது

ராஜினாமா செய்த 4 அதிமுக எம்எல்ஏக்கள்

ஏற்கனவே அதிமுக எம்எல்ஏக்கள் ஜெயக்குமார், மரகதம் குமரவேல், சத்யபாமா, இசக்கி சுப்பையா ஆகியோர் தங்களின் பதவியை ராஜினமா செய்தது அத்தொகுதி மக்கள் மற்றும் அரசியல் கட்சினரிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது ,

பாஜாக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை , உங்களை வெற்றி பெற செய்த் மக்களுக்கு நீங்கள் நன்றி கூறியே ஆக வேண்டும் , இது முற்றிலும் தவறான செயல்பாடு என்று விமர்சனம் செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது

தவெகவில் இணைந்த 4 அமைச்சர்கள்

தங்களின் பதவியை ராஜினாம செய்தஅதிமுக எம்எல்ஏக்கள் ஜெயக்குமார், மரகதம் குமரவேல், சத்யபாமா, இசக்கி சுப்பையா ஆகியோர் , பேரவை தலைவரை சந்தித்து ராஜினாம கடிதத்தை வழங்கி தவெகவில் இணைந்தனர்

சி. விஜயபாஸ்கர் ராஜினாமா

அதிமுகவில் சிவி சண்முகத்திற்கு ஆதர்வாக இருந்த விஜயபாஸ்கர் தற்போது பதவியை ராஜினாம செய்தும் , அதிமுகவில் இருந்து விலகுவதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் . நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் விராலிமலை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றஇருந்த்து குறிப்பிடத்தக்கது

6 தொகுதிகளில் இடைத்தேர்தல்

ஏற்கனவே ,முதல்வர் விஜய் திருச்சி கிழக்கு தொகுதியில் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்திருந்தார் , இந்த நிலையில் விஜய் முதல் சி ,விஜயபாஸ்கர் வரை தற்போது வரை காலியாக உள்ள தொகுதிகளின் எண்ணிக்கையானது 6 ஆக உயர்ந்து உள்ளது . 6 மாதங்களில் இந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது.

மேலும் படிக்க :MLA பதவியை ராஜினாமா செய்தார் சி.விஜயபாஸ்கர் : EPS மீது அதிருப்தி, TVK-க்கு செல்ல வாய்ப்பு: 6 தொகுதிகளில் இடைத்தேர்தல்!

====================