

அதிமுகவில் உட்கட்சி பூசல்
சட்டமன்ற தேர்தலில் அதிமுக 47 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தேர்தல் தோல்விக்கு பிறகு உட்கட்சி பூசல் வெடிக்க, 25 எம்எல்ஏக்கள் தவெக அரசை ஆதரித்து வாக்களித்தனர். 22 பேர் எதிர்ப்பு வாக்கு செலுத்தினர்.
பின்னர் சமாதான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், 21 எம்எல்ஏக்கள் எடப்பாடி அணிக்கு திரும்பினர். நான்கு எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைந்தனர்.
அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா
அதிமுக எம்எல்ஏக்கள் ஜெயக்குமார், மரகதம் குமரவேல், சத்யபாமா, இசக்கி சுப்பையா ஆகியோர் சட்டப்பேரவை தலைவர் ஜே.சி.டி.பிரபாகரிடம் ராஜினாமா கடிதம் கொடுத்து விட்டு, தவெகவில் இணைந்தனர்.
5 தொகுதிகளில் இடைத்தேர்தல்
அவர்களின் கடிதம் ஏற்கப்பட்டு நான்கு தொகுதிகளும் காலியானதாக அரசிதழில் அறிவிப்பு வெளியானது. ஏற்கனவே முதல்வர் விஜய் திருச்சி கிழக்கு தொகுதியில் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ததால், 6 மாதங்களில் 5 தொகுதிகள் இடைத்தேர்தலை சந்திக்க இருக்கின்றன.
சி. விஜயபாஸ்கர் ராஜினாமா
தவெகவை ஆதரித்து வாக்களித்த சி. விஜயபாஸ்கர், எடப்பாடி மீது அதிருப்தியில் இருந்தார். விராலிமலை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர், தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து இருக்கிறார்.
சபாநாயகர் ஜேசிடி பிரபாகரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அவர் கொடுத்தார்.
6 தொகுதிகளில் இடைத்தேர்தல்
இதைத்தொடர்ந்து அவர் தவெகவிற்கு செல்வதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. எனவே, தமிழக சட்டசபையில் இப்போது 6 தொகுதிகளில் காலியாக உள்ளன. ஏற்கனவே, 5 தொகுதிகளுக்கும் சேர்த்து, விராலிமலைக்கும் இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளது.
======================