BJP Ex President Annamalai on Edappadi Palanisamy Became CM in TN Assembly Election 2026 
தமிழ்நாடு

Election 2026: எடப்பாடி தான் தமிழக முதல்வர் : அண்ணாமலை திட்டவட்டம்

Annamalai on Edappadi Palanisamy : 2026ம் ஆண்டு முதல்வர் நாற்காலியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான் அமரப் போகிறார் என்று அண்ணாமலை தெரிவித்து இருக்கிறார்.

Kannan

மூப்பனார் நினைவு தினம் :

Annamalai on Edappadi Palanisamy : தமிழ் மாநில காங்கிரஸ் நிறுவனர் ஜி.கே. மூப்பனாரின் 24வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது(GK Moopanar 24th Memorial Day). இதை முன்னிட்டு சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை ”மூப்பனார் வழியில் நேர்மையான அரசியலை தமிழக மண்ணில், இந்திய மண்ணில் கொடுக்க நாம் எல்லோரும் ஆயத்தமாக வேண்டும்.

2026ல் ஆட்சி மாற்றம் உறுதி :

2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் நிச்சயமாக மாற்றம் வேண்டும் என்று எல்லோரும் பேச ஆரம்பித்து விட்டார்கள். சாமானிய மனிதர்கள் குறிப்பாக டீ கடையிலிருந்து ரோட்டில் எங்கு போனாலும் மக்கள் பேச ஆரம்பித்து விட்டார்கள். இன்றைக்கு நமது தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி(Edappadi Palanisamy As CM) இந்த மேடையில் உரையாற்றி இருக்கிறார்.

எடப்பாடி தான் அடுத்த முதல்வர் :

2026ல் முதல்வர் நாற்காலியில் இபிஎஸ்(EPS) தான் அமரப் போகிறார். அந்த நாற்காலியில் நிச்சயமாக 2026ல் மாற்றம் வரட்டும். ஒரு புதிய புரட்சி வரட்டும். ஏழை மக்களுக்கு எல்லாம், 2026ல் மாற்றம் வரட்டும். ஏழை மக்களுக்கு அரசு விடிவெள்ளியாக செயல்பட வேண்டும்.

மேலும் படிக்க : 118 தொகுதிகள்,60 லட்சம் பேருடன் சந்திப்பு: எடப்பாடி சுற்றுப் பயணம்

மூப்பனார் ஆசை 2026ல் நிறைவேறும் :

ஜி.கே.மூப்பனார்(GK Moopanar) மேலே இருந்து நம்மளை பார்த்து கொண்டு இருப்பார்கள். நிச்சயமாக அவரது ஆசை 2026ம் ஆண்டு தேர்தலில் நமக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் மேடையில் இருக்கும் அனைத்து தலைவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்”இவ்வாறு அண்ணாமலை உரையாற்றினார்.

====