
’மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ :
Edappadi Palanisamy Election Campaign Tour : தமிழக சட்டமன்றத்திற்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடக்க இருக்கிறது. இதை எதிர்கொள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன. அந்த வகையில் எதிர்க்கட்சியான அதிமுக, ஆட்சியை பிடிக்கும் முனைப்புடன் ’மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் பிரசார பயணம் நடத்தி வருகிறது. கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி 234 தொகுதிகளுக்கும் சென்று மக்களை சந்திக்கிறார்.
40 நாட்களில் 24 மாவட்டங்களில் பயணம் :
ஜூலை 7ம் தேதி(EPS Tour) தனது சுற்றுப் பயணத்தை தொடங்கிய அவர்,கோவை, விழுப்புரம், கடலூர், திருவாரூர், தஞ்சாவூர், புதூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு என 24 மாவட்டங்களுக்கு சென்றிருக்கிறார். 40 நாட்கள் பயணத்தில் இதுவரை 118 சட்டமன்றத் தொகுதிகளில் பிரசாரத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து இருக்கிறார்.
60 லட்சம் மக்களுடன் சந்திப்பு :
இதன்மூலம் சுமார் 60 லட்சம் மக்களை எடப்பாடி பழனிசாமி நேரடியாக சந்தித்து இருக்கிறார். அவரது சுற்றுப் பயண தூரம் 6,728 கிலோ மீட்டர் ஆகும். விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், கைத்தறி நெசவாளர்கள், பட்டு நெசவாளர்கள், மீனவர்கள், வேலையில்லா பட்டதாரிகள், மாணவர்கள், மாற்றுத் திறனாளிகள், போக்குவரத்துத் தொழிலாளர்கள், மாடுபிடி வீரர்கள் உள்ளிட்டோரை சந்தித்து எடப்பாடி பழனிசாமி கலந்தாலோசித்து இருக்கிறார்.
அதிமுக ஆட்சி vs திமுக ஆட்சி :
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட நலத் திட்டங்கள் குறித்தும், நல்லாட்சி குறித்தும் அவருடன் பொதுமக்கள் கருத்துக்களை பரிமாறிக்க கொண்டனர். தாங்கள் எதிர்கொண்டு வரும் பிரச்சினைகள் குறித்தும் எடுத்துக் கூறினர். அவர்களின் குறைகளை கேட்டறிந்த எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைந்ததும், தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார்.
பொதுமக்களுக்கு வாக்குறுதிகள் :
விவசாயிகளுக்கு தடையின்றி மும்முனை மின்சாரம், தாலிக்குத் தங்கம் திட்டத்துடன் சேர்த்து பட்டு வேட்டி, சேலை வழங்கப்படும். தீபாவளிக்கு மகளிருக்கு சேலை,. சொந்த வீடு இல்லாத ஏழை, எளிய தாழ்த்தப்பட்ட பழங்குடியின மக்களுக்கு இடம் வழங்கி, தரமான கான்கிரீட் வீடுகள்,
சொந்த ஆட்டோ வாங்க முற்படும் ஓட்டுநர்களுக்கு 75,000/- ரூபாய் மானியம், மீனவர்களுக்கான மீன்பிடி தடைக்கால உதவித் தொகை உயர்த்தப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகளை எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
ஸ்டிக்கர் மாடல் திமுக அரசு :
வெற்று விளம்பரங்கள், ஸ்டிக்கர்கள், மறையும் மாயாஜால அறிவிப்புகளை வெளியிடும் Failure Model ஸ்டாலின் அரசின் மீது தமிழக மக்கள் கடும் கோபத்தில் இருப்பதை சுற்றப் பயணம் மூலம் எடப்பாடி பழனிசாமி அறிந்து கொண்டார். விடியல் மாடல் என்று பெருமை பேசும் ஸ்டாலினால் மக்களின் வாழ்வாதாரம் கண்ணீரும். வலியுமாக மாறிவிட்டது. நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளைக் கொடுத்து மக்களை 51 மாதங்களுக்கு மேல் ஏமாற்றிவிட்டார் பொம்மை முதலமைச்சர் ஸ்டாலின் என்பதை மக்களிடம் விளக்கமாக எடுத்துக் கூறினார் எடப்பாடி பழனிசாமி.
திமுகவை அனுப்புவோம், அதிமுக ஆட்சி அமைப்போம் :
2021 சட்டமன்ற தேர்தலின்போது, திமுக தேர்தல் அறிக்கையில் 525-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. அவற்றில் முக்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. தமிழ்நாட்டை பீடித்திருக்கும் துயரத்திற்கு 2026ல் முடிவுரை எழுதுவோம். குடும்ப ஆட்சிக்கு ஒரே அடியாக முற்றுப் புள்ளி வைப்போம். மோசமான விளம்பர மாடல் போட்டோ ஷூட் ஸ்டாலின் ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம். அம்மா மாடல் ஆட்சியை அரியணையில் ஏற்றுவோம் என்று பொதுமக்களிடையே பேசும் போது எடப்பாடி பழனிசாமி உறுதிபடத் தெரிவித்தார்.
அதிமுக தலைமையில் தான் ஆட்சி :
தமிழகத்தில் அதிமுக தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று தமிழகம் வந்த இரண்டு முறையும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்து இருந்தார். பிரசாரத்தின் போது இதற்கு தெளிவாக பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் அதிமுக ஆட்சி தான், முதல்வர் வேட்பாளர் தான் தான் என்று உறுதியாக கூறினார்.
திமுகவிற்கு அச்சம் வந்துவிட்டது :
இந்த எழுச்சிப் பயணத்தை பார்த்து திமுகவினருக்கும், முதல்வர் ஸ்டாலினுக்கும் அச்சம் ஏற்பட்டு இருக்கிறது. இதன் காரணமாகவே, சுற்றுப் பயணத்தின் 20க்கும் மேற்பட்ட இடங்களில் ஆம்புலன்சுகள் இடையில் வந்தன. இது மக்களை திசை திருப்பும் முயற்சி என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி இருந்தார். மக்களின் ஒருவனாக, சாதாரண தொண்டனாக எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டு வரும் இந்தப் பயணம், 2026ல் மாற்றத்தை கொண்டு வரும். திமுக ஆட்சியை அகற்றிவிட்டு அதிமுக ஆட்சி அமைக்கும் என்று தொண்டர்கள் நம்பிக்கையுடன் காத்துக் கிடக்கின்றனர்.
===========================