Microchip Mandatory for Pet Dogs in Chennai 
தமிழ்நாடு

வளர்ப்பு நாய்களுக்கு ’மைக்ரோ சிப்’: இல்லாவிட்டால் ரூ.3,000 அபராதம்

Microchip Mandatory for Pet Dogs in Chennai : சென்னையில் வளர்க்கப்படும் நாய்களுக்கு மாநகராட்சி சார்பில் மைக்ரோ சிப் பொருத்துவது கட்டாயம் எனத் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

Kannan

நாய்கள் தொல்லை அதிகரிப்பு :

Microchip Mandatory for Pet Dogs in Chennai : நாளுக்குநாள் விரிவு பெற்று வரும் தமிழகத்தின் தலைநகரான சென்னை பெருநகரத்தில் தெரு நாய்களாலும், கட்டுப்பாடின்றி சுற்றும் வளர்ப்பு நாய்களாலும் பொதுமக்களுக்கு தொந்தரவுகள் ஏற்படுகின்றன. இரவு நேரங்களில் அலுவலகம் முடித்து வீடு திரும்புவோர், பள்ளி சென்று வீடு திரும்பும் சிறுவர்கள், சிறுமிகள் மீது தெரு நாய்கள் கடித்து, தாக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.

வளர்ப்பு நாய்களுக்கு கட்டுப்பாடு :

நிலைமையை கட்டுப்படுத்த மாநகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தாலும், பிரச்சினை ஓய்ந்தபாடில்லை. இந்தநிலையில்

சென்னை மாநகராட்சி புதிய விதிமுறைகளை(Chennai Corporation New Rules) அறிவித்து இருக்கிறது. அதன்படி வீட்டில் வளர்க்கப்படும், பிட்புல், ராட்வீலர், ஜெர்மன் ஷெப்பர்ட் போன்ற நாய் இனங்களால் ஏற்படும் பாதிப்புகள் அதிகரித்து வருவதால், அவற்றை வெளியே அழைத்து செல்லும் போது கட்டாயம் வாய்மூடி அணிவிக்க வேண்டும்.

தெருநாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி :

தடுப்பூசி போட்டியிருக்க வேண்டும். உரிமம் பெற்றிருக்க வேண்டும்(Dog Licence Chennai). வளர்ப்பு நாய்கள் யாரையாவது கடித்தால் அதன் உரிமையாளர்களே அதற்கு முழுப் பொறுப்பேற்க வேண்டும். சென்னையில் சுமார் 1.80 லட்சம் தெரு நாய்களுக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாத இறுதிக்குள் வெறிநாய் தடுப்பூசி(Rabies Vaccine in Chennai) செலுத்த இலக்கு நிர்ணயம்.

தெருநாய்களுக்கு மைக்ரோ சிப் :

தற்போது வரை 11,000 தெருநாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்தம். சென்னையில் 12,500 பேர் தங்கள் செல்லப் பிராணிகளுக்கு உரிமம்(Microchip for Street Dogs in Chennai) பெற்றுள்ளனர். மற்றவர்கள் உரிமம் பெற பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அடுத்த மாதத்தில் இருந்து கட்டாயமாக்கப்படும்.

மேலும் படிக்க : Street Dog: 139 தெரு நாய்களுக்கு கருத்தடை செய்வதற்கு ரூ. 20 கோடி?

வளர்ப்பு நாய்களுக்கும் மைக்ரோ சிப் :

அடுத்த மாதத்திலிருந்து, வளர்ப்பு நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்துவது கட்டாயமாகும். இதற்காக 2 லட்சம் மைக்ரோ சிப்கள் வாங்கப்பட்டுள்ளன(Microchip Mandatory for Pet Dogs in Chennai). நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்தா விட்டால், அதன் உரிமையாளருக்கு 3 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்(Chennai Corporation Fine). *மைக்ரோ சிப் பொருத்தப்பட்ட நாய்கள், அதற்கென உருவாக்கப்பட்ட செயலி மூலம் கண்காணிக்கப்படும்” இவ்வாறு சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

--------------