Hindu Munnani Announced Of Vinayagar Chaturthi 2025 Idols in Tamil Nadu 
தமிழ்நாடு

தமிழகத்தில் 1.5 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் : இந்து முன்னணி

Hindu Munnani on Vinayagar Chaturthi 2025 Idols : தமிழகத்​தில் ஒன்றரை லட்​சம் இடங்​களில் விநாயகர் சிலைகள் வைக்கப்படும் என்று, இந்து முன்​னணி தெரிவித்துள்ளது.

Kannan

27ம் தேதி விநாயகர் சதுர்த்தி :

Hindu Munnani on Vinayagar Chaturthi 2025 Idols : நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா வரும் 27ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக சிலைகள் தயாரிப்பு பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்த இடங்கள் தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.

ஒன்றரை லட்சம் விநாயகர் சிலைகள் :

இந்தநிலையில், திருப்​பூரில் செய்​தி​யாளர்​களிடம் பேசிய இந்து முன்​னணி மாநிலத் தலை​வர் காடேஸ்​வரா சி.சுப்​பிரமணி​யம், “ விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி தமிழ்​நாட்​டில் ஒன்​றரை லட்​சம் இடங்களில் சிலைகள் வைக்க ஏற்​பாடு​கள் நடை​பெற்று வரு​கின்​றன. கடந்த ஆண்டு 15 லட்​சம் வீடு​களில் அரை அடி முதல் ஒரு அடி வரையி​லான விநாயகர் சிலைகள் வைக்​கப்​பட்​டன. இந்த ஆண்டு அதை​விட அதிக எண்​ணிக்​கை​யில் சிலைகள் வைக்கப்படும்.

சென்னையில் 5,500 விநாயகர் சிலைகள் :

சென்​னை​யில் மட்​டும் 5,500 இடங்​களி் விநாயகர் சிலைகள் வைக்​கப்பட உள்​ளன. திருப்​பூர் மாவட்​டம் முழு​வதும் 6 ஆயிரம் இடங்​களில் சிலைகள் வைக்க ஏற்​பாடு செய்து வரு​கிறோம். திருப்​பூரில் நடை​பெற உள்ள விநாயகர் சதுர்த்தி ஊர்​வலத்​தில் பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன், நடிகை கஸ்​தூரி கலந்து கொள்வார்கள். கோவை​யில் பாஜக முன்​னாள் தலை​வர் அண்​ணா​மலை, இயக்குநர்கள் பேரரசு உள்​ளிட்டோர் பங்​கேற்க உள்​ளனர்.

முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு :

விநாயகர் சதுர்த்தி(Vinayagar Chaturthi 2025) விழா​வில் பங்​கேற்​கு​மாறு முதல்​வர் மு.க. ஸ்​டா​லினுக்கு(MK Stalin) அழைப்பு விடுப்​போம். அவர் நேரம் கொடுத்தால், அவரை சந்​தித்து அழைப்​பிதழ் வழங்​கத் தயா​ராக இருக்​கிறோம். ரம்​ஜான், பக்​ரீத், கிறிஸ்​து​மஸ் போன்ற பண்டிகைகளில் அவர் பங்​கேற்​ப​தை​போல, விநாயகர் சதுர்த்தி விழா​விலும் பங்​கேற்க வேண்​டும் என்று அவருக்கு அனுப்​பும் கடிதத்​தில் வலி​யுறுத்​து​வோம்.

மேலும் படிக்க : இயற்கை பொருட்களால் விநாயகர் சிலைகள் : பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

இலவசமாக விநாயகர் சிலைகள் :

ரம்​ஜானுக்கு அரிசி வழங்​கு​வதைப்​போல, வீடு​களுக்கு இலவச​மாக அரை அடி விநாயகர் சிலையை தமிழக அரசு இலவச​மாக வழங்க வேண்​டும் என்​றும் முதல்​வரிடம் கோரிக்கை வைப்​போம்” இவ்வாறு காடேஸ்​வரா சி.சுப்​பிரமணி​யம்(Kadeswara Subramaniam) கூறினார்.

===========