தமிழக சட்டமன்ற தேர்தல் :
Amit Shah Tamil Nadu Visit : தமிழக சட்டமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கிறது. இன்னும் 6 மாத காலமே தேர்தல் பணிகளுக்கு உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் மக்களை சந்திக்கும் நிகழ்ச்சிகளை முன்னெடுத்து வருகின்றன. அந்த வகையில், அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்று இருக்கும் பாஜகவும் தேர்தலுக்கான வியூகங்களை வகுத்து வருகிறது.
பாஜக பூத் கமிட்டி கூட்டங்கள் :
அதன் ஒரு பகுதியாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்(Nainar Nagendran) தலைமையில் மண்டலம் வாரியாக வாக்குச்சாவடிக்குழு கூட்டங்கள் மற்றும் மாநாடுகளை நடத்தப்படுகின்றன. முதற்கட்டமாக நெல்லை மாவட்டத்தில் இன்று மாலை பாஜக பூத் கமிட்டிமாநாடு(Nellai BJP Booth Committee Manadu) நடைபெறுகிறது. தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் நடைபெற உள்ளது.
பொறுப்பாளர்கள் பங்கேற்பு :
திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர் ஐந்து மக்களவைத் தொகுதிகளைச் சார்ந்த பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மற்றும் பாஜக நிர்வாகிகள் மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளனர்.
அமித் ஷா கலந்து கொள்கிறார் :
இந்த மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா(Amit Shaha in Nellai Booth Committee) கலந்து கொள்ள உள்ளார். இதற்காக கொச்சியில் இருந்து இன்று பிற்பகல் தூத்துக்குடிக்கு வரும் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பாளையங்கோட்டை செல்கிறார்.
நெல்லையில் நயினார் நாகேந்திரன் வீட்டிற்குச் சென்று தேநீர் அருந்த உள்ளதாகக் கூறப்படுகிறது. இங்கு ஆலோசனை கூட்டமும் நடைபெறும் எனத் தெரிகிறது.
பூத் கமிட்டி பொறுப்பாளர்களுடன் ஆலோசனை :
இதைத் தொடர்ந்து, பாஜக பூத் கமிட்டி மாநாடு(BJP Booth Committee Maanadu) நடைபெறும் இடத்திற்கு அமித் ஷா செல்கிறார். பாஜக பூத்கமிட்டி பொறுப்பாளர்களிடம் அவர் உரை நிகழ்த்துகிறார். இதனை அடுத்து பாஜக மூத்த தலைவர்களைச் சந்தித்துத் தேர்தல் களம் குறித்து விசாரிக்க உள்ளார்.அதிமுக - பாஜக கூட்டணியில் வேசு சில கட்சிகள் இணைவது குறித்தும், சட்டமன்ற தேர்தலுக்காக கூட்டணி கட்சியுடன் இணைந்து எவ்வாறு செயல்படுவது, பொதுமக்களை சந்தித்து அவர்களை குறைகளை கேட்டு அறிவது, உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க : ’தம்பி ஏதோ பேசுகிறார், பேசிட்டு போகட்டும்’: விஜயை கலாய்த்த தமிழிசை
மாநாட்டில் பாஜக மூத்த தலைவர்கள் :
இந்த மாநாட்டில் பாஜக மூத்த தலைவர்களான தமிழிசை சௌந்தர ராஜன், எச் ராஜா ,அண்ணாமலை(Annamalai), மத்திய இணை அமைச்சர் எல். முருகன், பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள். உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகையை ஒட்டி 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருக்கிறார்கள்.
====