
பாஜகவை சீண்டிய விஜய் :
Tamilisai Soundararajan About TVK Vijay 2nd Manadu : தமிழக வெற்றிக் கழகத்தின் மதுரை மாநாட்டில் உரையாற்றிய நடிகர் விஜய், கோரிக்கை என்ற பெயரில் பிரதமர் மோடியை விமர்சித்தார். தமிழ்நாட்டில் பாஜக ஜெயக்கவே முடியாது. தாமரையில் தண்ணீர் ஒட்டவே ஒட்டாது என்றும் கூறினார்.
விஜய்க்கு தமிழிசை பதிலடி :
விஜய்யின் இந்தப் பேச்சு பற்றி, தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்(Tamilisai Soundararajan Reaction on TVK Vijay), “ தண்ணீர் ஒட்டுவதற்கு தாமரை கிடையாது, மலர்வதற்காக தான் என்று குறிப்பிட்டார். தம்பி ஏதோ பேச வேண்டும் என பேசுகிறார். கொஞ்ச நாள் பேசட்டும். கச்சத்தீவை தாரைவார்த்தது காங்கிரசும், திமுகவும். அதனை மீட்க நம்மால் முடிந்த அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம்.
விஜய்க்கு அட்வைஸ் :
ஆபரேஷன் சிந்தூர் மூலம், தீவிரவாதிகளை ஒழித்து, நாட்டு மக்களை பாதுகாத்திருக்கிறோம். அதை பற்றி விஜய்(TVK Vijay) பேசவே இல்லை. எல்லாவற்றையும் பரவலாக பேசி நல்லவற்றை பாராட்டி, செய்ய வேண்டியதற்கு வேண்டுகோளாக வைக்கலாம்.
கற்பனையாக பேசுகிறார் விஜய் :
அனைத்து சினிமாக்காரர்களையும் முட்டாள் என யாரும் சொல்லவில்லை. அவராக கற்பனை செய்துகொள்கிறார். திரையில் இருந்தவர்கள், சரியான அரசியல்வாதியாக மாறி செய்திருக்கிறார்கள். இவர் நடிகராக இருந்து அப்படியே வருவேன் என சொல்வதை தான் அனைவரும் சுட்டிக் காட்டுகிறோம்.
மேலும் படிக்க : 234 தொகுதிகளில் நானே வேட்பாளர் : ஆட்சியை பிடிப்பேன், விஜய் சூளுரை
அனைத்து நடிகர்களையும், திரைத்துறையினரையும் இவரோடு ஒப்பிட்டுக் கொள்ள முடியாது. திரைத்துறையினர் என்றால் இவர் மட்டும்தான் எனவும் சொல்ல முடியாது” இதை விஜய் புரிந்து கொண்டு அதற்கேற்ப பேச வேண்டும் என்று தமிழிசை சௌந்தரராஜன்(Tamilisai Soundararajan) பதிலளித்தார்.