Vijay refuses to let me into his house - Sangeetha files a new petition! source:google
தமிழ்நாடு

வீடின்றி தவிக்கிறேன், விஜய் வீட்டிற்குள் அனுமதிக்க மறுக்கிறார் : சங்கீதா புதிய குற்றச்சாட்டு, மனுத்தாக்கல்!

கோடி கோடியாக சம்பாதிக்கும் விஜய் குழந்தைகளுக்கும், தனக்கும் சேர வேண்டிய சொத்துகளை பிரித்துக் கொடுத்து, நியாயமான ஜீவனாம்சம் வழங்க வேண்டும் - சங்கீதா

S Kavitha

விஜய், சங்கீதா விவாகரத்து வழக்கு

நடிகரும், தவெக தலைவருமான விஜயிடம் அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார்.

சங்கீதா தாக்கல் செய்திருந்த மனுத்தாக்கல் நகல் கடந்த வாரம் ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையானது. மேலும் அரசியல் வட்டாரங்கள், தவெக தொண்டர்கள், ரசிகர்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

சங்கீதா முன்வைத்த குற்றச்சாட்டுகள்

இந்த விவாகரத்து மனுவில் சங்கீதா விஜய் மீது அடுக்கடுக்கான குற்றச்சட்டுகளை முன்வைத்திருந்தார்.

பிரபல நடிகையுடன் வெளிநாடு செல்வது, புகைப்படங்கள் வெளியாவது என அவரும், குழந்தைகளும் பல அவமானங்களை சந்தித்ததாக குறிப்பிட்டிருந்தார்.

பொருளாதார தேவைகளை முடக்கிய விஜய்

தொடர்ந்து, தனது பொருளாதார தேவைகளை விஜய் முடக்கிவிட்டதாகவும், தங்களின் திருமண உறவு முறிந்து விட்டதாகவும் , சமரச பேச்சுவார்த்தை நடத்த முயன்று அதுவும் தோல்வியில் முடிந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.

முக்கியமாக தனக்கு நெருக்கடி கொடுக்கும் விதமாக நடந்து கொண்டால், பிரபல நடிகையின் பெயரை வெளியிடுவேன் என்றும் தெரிவித்திருந்தார்.

விஜய்க்கு நெருக்கடி

சட்டசபை நெருங்கும் தருவாயில் விஜய் மீதான சங்கீத முன்வைத்த குற்றச்சாட்டுகள் விஜய்க்கு நெருக்கடியை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது.

விஜய்கு ஆதரவாக கருத்து

ரசிகர்களும் விஜய்க்கு ஆதரவாக, விஜய் மீது கருத்து தெரிவிக்கும் நபர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாகவும் பேசி வந்தனர்.

மேலும் படிக்க:Vijay Trisha Video Viral : திருமண நிகழ்ச்சியில் விஜய் - த்ரிஷா! பேசுபொருளான வீடியோ!

வரவேற்பு நிகழ்ச்சியில் விஜய், த்ரிஷா

இந்த நிலையில் கல்பாத்தி தயாரிப்பு நிறுவன இல்லத் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் விஜயும், நடிகை த்ரிஷாவும் ஒரே நிற உடையில், ஒரே காரில் வந்து பங்கேற்ற காணொளிகள் வெளியாகி பேசுபொருளானது.

சங்கீதா புதிய மனுத்தாக்கல்

இந்நிலையில் விஜயின் மனைவி சங்கீதா இன்று புதிதாக மனுத்தாக்கல் ஒன்றை செய்துள்ளார்.

வீடின்றி தவிக்கிறேன்

அந்த மனுவில், நீலாங்கரை வீட்டில் வசிக்க தனக்கு அனுமதி வேண்டும் என்றும், கோடி கோடியாக சம்பாதிக்கும் விஜய் குழந்தைகளுக்கும், தனக்கும் சேர வேண்டிய சொத்துகளை பிரித்துக் கொடுத்து, நியாயமான ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சுமூகமான பிரிவிற்கு ஒத்துவராத விஜய்

விஜயிடம் இருந்து சுமூகமாக பிரிவதற்கு பல முறை முயற்சித்தும் விஜய் ஒத்துக் கொள்ள மறுத்ததாக சங்கீதா அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

வீட்டில் தங்க அனுமதி மறுப்பு

மேலும் விவாகரத்து வழக்கு தொடர்ந்தால், வீட்டில் தங்குவதற்கு அனுமதி கிடையாது என்று விஜய் தனது வழக்கறிஞர் மூலமாக கூறியதாகவும் சங்கீதா தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

இடைக்கால உத்தரவு வேண்டும்

இதன் காரனமாக வீடின்றி தவிக்கும் தனக்கு , விவாகரத்து வழக்கு முடியும் வரை அனைத்து வசதிகளுடன் நீலாங்கரை வீட்டில் வசிக்க அனுமதியளித்து, இடைக்கால உத்தரவு தர வேண்டும் என்று நீதிமன்றத்தை கேட்டுக்கொண்டுள்ளார்.

ஏப்ரல் 20-ல் வழக்கு விசாரணை

ஏற்கெனவே சங்கீதா விவாகரத்து கோரி செங்கல்பட்டி குடும்பநல நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு ஏப்ரல் 20 ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

சட்டமன்ற தேர்தல் vs விவாகரத்து வழக்கு

சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 3 அல்லது 4வது வாரத்தில் நடைபெற இருப்பதாக கூறப்படும் நிலையில், முதன்முதலாக சட்டமன்ற தேர்தலை சந்திக்கவிருக்கும் விஜய் என்ன செய்யப் போகிறார் என்ற கேள்வியும் எழுந்து வருகிறது.

மேலும் படிக்க: மனைவி, மகளை வீட்டிலிருந்து விரட்டிவிட்டு மகளிர் தினவிழா கொண்டாட்டமா? இயக்குநர் அமீரின் வாட்ஸ் ஆப் பதிவு வைரல்!