

தவெக கட்சியின் மகளிர் தின விழா
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இன்று மாலை மாமல்லபுரத்தில் மகளிர் தின விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் மகளிருக்கான முக்கிய திட்டங்களை தவெக தலைவர் விஜய் வெளியிட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
விஜய் மீது இயக்குநர் அமீர் காட்டம்
இந்நிலையில், தவெக தலைவர் விஜய்யின் மகளிர் தின விழா கொண்டாட்டம் குறித்து இயக்குநரும், நடிகருமான அமீர் பதிவிட்ட வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அமீரின் வாட்ஸ் ஆப் ஸ்டேடஸ்
இதுதொடர்பாக அமீர் பதிவிட்டதாக சொல்லப்படும் வாட்ஸ் ஆப் ஸ்டேடஸில், தமிழ்நாட்டில் ஒரு ஹிட்லர் உருவாகிக் கொண்டு இருக்கிறார் என்றும் மனைவி, மகள் இருவரையும் வீட்டிலிருந்து விரட்டி விட்டு “ மகளிர் தின விழா” எனும் கேவலமான அரசியல் நிகழ்ச்சி என்று பதிவிட்டுள்ள அவரது வாட்ஸ் ஆப் ஸ்கிரீன்ஷாட் இணையத்தில் வைரலாகி வருகிறது.
முன்னதாக விஜயின் அரசியல் பயணம்
தமிழகத்தின் உச்ச நட்சத்திரமான விஜய் திரைத்துரையை விட்டு விலகி தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி முழுநேர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். மேலும் வரும் சட்டமன்ற தேர்தலையும் முதன்முதலாக எதிர்கொள்ள இருக்கிறார்.
விஜய் மீதான விமர்சனங்கள், குற்றச்சாட்டுகள்
கட்சி தொடங்கியதில் இருந்தே, பல்வேறு விமர்சங்களையும் சந்தித்து வருகிறார். கரூர் சம்பவத்தைத் தொடர்ந்து விஜய் மீது குற்றச்சாட்டுகளும் தொடர்ந்து முன்வைக்கப்பட்டது.
இதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்த தவெகவினர், விஜய் ரசிகர்களுக்கு பேரிடியாக சங்கீதாவின் விவாகரத்து மனுத்தாக்கல் அமைந்தது.
சங்கீதா முன்வைத்த குற்றச்சாட்டுகள்
விஜய் மீது அவரது மனைவி சங்கீதா முன்வைத்த குற்றச்சாட்டுகளும் பேசுபொருளானது.
பொருளாதார ரீதியாக முடக்கம், திருமண உறவு முறிவு, பிரபல நடிகையுடன் வெளிநாடுகளுக்கு செல்வதும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவியதால் அவரும் குழந்தைகளுக்கும் அவமானங்களை அனுபவித்ததாக குறிப்பிட்டிருந்தார்.
திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் விஜய் - த்ரிஷா
சங்கீதா விவாகரத்து செய்தி வெளிவந்து பூதாகரமாக வெடித்து சில நாட்களே ஆன நேரத்தில் விஜயும் த்ரிஷாவும் ஒரே காரில் ஏ.ஜி.எஸ். தயாரிப்பு நிறுவன இல்லத் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்ததாக கூறப்படுகிறது.
மேலும் இருவரும் ஒரே நிறத்தில் உடையணிந்து இந்நிகழ்வில் பங்கேற்றது பேசுபொருளானது.
மகளிர் தினவிழா கொண்டாட்டம்
இதைத்தொடர்ந்து தான் தமிழக வெற்றிக் கழகம் சார்பில், மாமல்லபுரத்தில் இன்று மாலை மகளிர் தின விழா கொண்டாட்டம் நடைபெறும் என்றும், இந்த விழாவின் போது மகளிர்களுக்கான திட்டங்கள் அறிவிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இயக்குநர் அமீர் வெளியிட்ட வாட்ஸ் ஆப் பதிவும் வைரலாகி வருகிறது. இதற்கு முன்பும் அமீரின் அரசியல் குறித்தான வாட்ஸ் ஆப் பதிவுகள் வைரலாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.