Impact of cooking gas shortage in India : HCL allows work from home due Fuel Shortage google
தமிழ்நாடு

சமையல் எரிவாயு தட்டுப்பாடு தாக்கம்: வீட்டில் இருந்​து பணியாற்ற HCL நிறுவனம் அனுமதி!

HCL allows work from home due to Fuel Shortage : தொடரும் போர் சூழலால் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதன் விளைவாக ஐடி நிறுவனமான HCL ஊழியர்களை வீட்டில் இருந்​து பணியாற்ற அனுமதி வழங்கியுள்ளது

Rohini

தொடரும் போர் பதற்றம்

HCL allows work from home due to Fuel Shortage : தொடரும் ஈரான் இஸ்ரேல் அமெரிக்கா போர் சூழல் காரணமாக கச்ச எண்ணெய் ஏற்றுமதியில் பாதிப்பானது ஏற்பட்டிருக்கும் நிலையில் எரிபொருள்கள் ஏற்றுமதி இறக்குமதி மற்றும் சமையல் எரிவாயு பயன்பாட்டிலும் பெரும் தட்டுப்பட்டானது ஏற்பட்டிருக்கிறது.

சமையல் எரிவாயு தட்டுப்பாடு : மூடப்பட்ட உணவகங்கள்

தொடரும் போர் எதிரொளியல கச்ச எண்ணெய் பாதிப்பானது ஏற்பட்டிற்குக்கும் நிலையில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு பெரிதளவில் ஏற்பட்டுள்ளது. தட்டுப்பாடை தொடர்ந்து பல்வேறு நகரங்களில் உணவகங்களானது மூடப்பட்டுள்ளது.

அந்த வகையில் சென்​னை, மும்​பை, பெங்களூரு, கொல்​கத்தா உள்​ளிட்ட நகரங்​களில் சிலிண்​டர் விநி​யோகம் பாதிக்கப்பட்டுள்ளதால் உணவகங்களை மூடுவதாகவும் உண்வு பட்டியல்களை குறைப்பதாகவும் அறிவித்துள்ளது.

மேலும் படிக்க : IEA : ஈரான் போர், எண்ணெய் விநியோகம் சரிவு : தினமும் 80 லட்சம் பீப்பாய் தேக்கம் : வளரும் நாடுகளுக்கு பாதிப்பு

தட்டுப்பாடு எதிரொலி WFH அறிவித்த HCL நிறுவனம்

இந்​நிலை​யில் HCL டெக் ஐ.டி. நிறு​வனத்​தின் சென்னை ஊழியர்​கள் வீட்​டிலிருந்தே பணி​யாற்​று​மாறு அந்​நிறு​வனம் அனுமதி வழங்கியுள்ளது.

நிலைமை சீராகும் வரை அவர்​கள் வீட்​டிலிருந்தே பணி​யாற்​றலாம் என்​றும், ஊழியர்​களுக்​குத் தேவை​யான உதவி​களை நிறு​வனம் வழங்​கும் என்​றும் எச்​சிஎல் டெக் நிறு​வனம் வெளியிட்டுள்ள செய்​திக்​குறிப்​பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.