IEA : ஈரான் போர், எண்ணெய் விநியோகம் சரிவு : தினமும் 80 லட்சம் பீப்பாய் தேக்கம் : வளரும் நாடுகளுக்கு பாதிப்பு

International Energy Agency ஈரான் போர் காரணமாக உலக அளவில் எண்ணெய் விநியோகம் தினமும் 80 லட்சம் பீப்பாய் அளவுக்கு பாதிக்கப்பட்டு இருக்கிறது.
International Energy Agency said, Iran war affected global oil supplies by 8 million barrels per day
International Energy Agency said, Iran war affected global oil supplies by 8 million barrels per day google
1 min read

போரால் விற்பனை சரிவு

ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் நடத்தி வரும் தாக்குதல் 14வது நாளாக நீடிக்கிறது. இந்தப் போர் காரணமாக, உலக அளவில் கச்சா எண்ணெய் விற்பனை கடுமையாக சரிந்து இருக்கிறது.

இது உலக வரலாற்றிலேயே கச்சா எண்ணெய் சந்தையில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய பாதிப்பு என்று, சர்வதேச எண்ணெய் முகமை தனது மாதாந்திர அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளது.

ஹோர்முஸ் நீரிணையை மூடிய ஈரான்

உலகின் மிக முக்கியக் கடல்வழிப் பாதையான ஹோா்முஸ் நீரிணையை ஈரான் மூடி வைத்துள்ளது. சீனா, இந்தியா எண்ணெய் கப்பல்கள் மட்டும் இந்த வழியாக செல்ல அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. மற்ற நாடுகளின் கப்பல்கள் வந்தால் தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரான் எச்சரித்துள்ளடு.

தவிக்கும் எண்ணெய் உற்பத்தி நாடுகள்

நீரிணை மூடப்பட்டதால், 20 சதவீதம் அளவுக்கு எண்ணெய் சப்ளை பாதிக்கப்பட்டுள்ளது. ஈராக், கத்தாா், குவைத், ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா போன்ற நாடுகள் தங்களின் எண்ணெய் உற்பத்தியைக் குறைக்கவோ அல்லது முழுமையாக நிறுத்தவோ வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டு இருக்கின்றன.

கச்சா எண்ணெய் விற்பனை சரிவு

கச்சா எண்ணெய் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படும் நிலையில், போரின் தீவிரத்தால் உலகளாவிய கச்சா எண்ணெய் நுகா்வு 25 சதவீதம் வரை குறைந்து இருக்கிறது.

இது எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், வளரும் நாடுகளில் பெட்ரோலிய பொருட்களின் விலையை அதிகரிக்க செய்து இருக்கிறது. 95 நாடுகள் விலையை உயர்த்தி இருக்கின்றன.

அவசர கால நடவடிக்கை

நெருக்கடியைச் சமாளிக்கும் விதமாக, சா்வதேச எரிசக்தி முகமையில் அங்கம் வகிக்கும் நாடுகள் ஒன்றிணைந்து, அவசர கால இருப்பிலிருந்து 40 கோடி பீப்பாய் கச்சா எண்ணெயை சந்தையில் விடுவிக்க ஒப்புக்கொண்டுள்ளன. இதன் மூலம் நிலைமை ஓரளவு சீராகும் என்று எண்ணெய் முகமை கணித்துள்ளது.

வளைகுடா நாடுகளில் உற்பத்தி முடக்கம்

‘உள்நாட்டு சேமிப்பு கிடங்குகள் நிரம்பி வருவதாலும், கப்பல்கள் சரக்குகளை ஏற்றிச் செல்ல முன்வராததாலும் மத்திய கிழக்கு நாடுகளில் எண்ணெய் உற்பத்தி முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இது உலக நாடுகளின் பொருளாதார வளா்ச்சியைப் பெருமளவில் பாதிக்கும். குறிப்பாக, எரிசக்தி தேவையில் வளா்ந்து வரும் நாடுகளுக்கு இது பெரும் சவாலாக அமையும் என்று, சர்வதேச எண்ணெய் முகமை எச்சரித்துள்ளது.

====

logo
Thamizh Alai
www.thamizhalai.in