India Skills Report 2025 State Wise List By Wheebox Reports 2025 in Tamil 
தமிழ்நாடு

பெண்கள் வேலைபார்க்க விரும்பும் மாநிலங்கள்: AP முதலிடம்,TN 4ம் இடம்

India Skills Report 2025 State Wise List : பெண்களுக்கு பணியாற்ற ஏற்ற மாநிலங்கள் வரிசையில் ஆந்திரா முதலிடத்தை பிடித்து அசத்தி இருக்கிறது.

Kannan

இந்தியாவின் திறன்கள் ஆய்வு - 2025

India Skills Report 2025 State Wise List : சர்வதேச கல்வி மற்றும் திறனை அடையாளம் காணும், 'விபாக்ஸ்' என்ற தனியார் அமைப்பு, 'நம் நாட்டின் திறன்கள் - 2025' என்ற அறிக்கையை அண்மையில் வெளியிட்டது.இதில், நம் நாட்டில் பெண்களின் வேலைவாய்ப்பு, பணிபுரியும் இடம். அவர்களுக்கு ஏற்ற மாநிலங்கள் உள்ளிட்டவற்றை பற்றிய முடிவுகள் வெளியிடப்பட்டன.

பெண்கள் வேலைக்கு செல்வது அதிகரிப்பு

பாலின சமத்துவம், தொழில் சார்ந்த வேலைவாய்ப்புகள் உள்ளிட்ட காரணிகள் பெண்களை ஈர்த்து வருவதால், ஏழு ஆண்டுகளில் நம் நாட்டில் பெண்களின் வேலைக்கு செல்வது பன்மடங்கு அதிகரித்து இருப்பது தெரியவந்து உள்ளது. 2019ல் பெண்கள் வேலைக்கு செல்வது 45.6 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது அது, 47.53 சதவீதமாக அதிகரித்துள்ளது.

பெண்கள் விரும்பும் மாநிலம் - ஆந்திரா

பெண்கள் பணிபுரிய அதிகம் விரும்பும் மாநிலங்கள் பட்டியலில், ஆந்திரா முதலிடத்தில் திகழ்கிறது(India skills report 2025 top state). அடுத்ததாக கேரளா, குஜராத் ஆகிய மாநிலங்கள் இடம்பிடித்துள்ளன.

தமிழகத்துக்கு 4ம் இடம்

நான்காவது இடத்தில், தமிழகமும், ஐந்தாவது இடத்தில் மஹாராஷ்டிராவும் உள்ளன. கர்நாடகா, எட்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அந்தந்த மாநிலங்களின் சமூக மற்றும் பொருளாதார செயல்பாடுகளை இந்த பட்டியல் வெளிப்படுத்துவதாக தெரிகிறது.

மேலும் படிக்க : கிராம ஊராட்சி செயலர் வேலை : தேர்வு இல்லை, உடனே விண்ணப்பிக்கலாம்

மாநிலங்களில் உள்கட்டமைப்புகள்

குறிப்பாக மாநிலங்களில் நிலவும் பாதுகாப்பு, உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தொழில் வளர்ச்சி ஆகியவை வாய்ப்புகளின் அடிப்படையில் பெண்களை வேலைக்கு செல்வது அமைந்து இருக்கிறது. வேலைவாய்ப்பை மட்டும் அளவீடாக பார்க்காமல், மாநிலங்களின் அணுகு முறை, கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வசதிகள் உள்ளிட்டவை இதில் அடங்கி உள்ளன.

===============