
1,450 காலிப் பணியிடங்கள் :
Village Panchayat Secretary Posts in Grama Panchayat Recruitment 2025 : தமிழ்நாட்டில் மொத்தம் 1,450 காலிப் பணியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டம் தோறும் உள்ள காலிப் பணியிட விவரங்களை ஆன்லைன் வழியாகவும் ஊராட்சி ஒன்றியங்களின் மூலமாகவும் வேலை வேண்டி விணப்பிப்போர் தெரிந்து கொள்ளலாம்.
கிராம ஊராட்சி செயலர் - தேர்வு கிடையாது
கிராம ஊராட்சி செயலர் காலி பணியிடங்களுக்கு தேர்வு இல்லை என்பதால் விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை அதிகளவில் இருக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாவட்டந்தோறும் தனித்தனியாக கிராம ஊராட்சி செயலர்(Grama Panchayat Secretary Job Vacancy) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் இன்று முதல் https://tnrd.tn.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்
டிசம்பர் முதல் வாரத்தில் நேர்காணல்
டிசம்பர் முதல் வாரத்தில் கிராம ஊராட்சி செயலர் பணிக்கான நேர்காணல் நடத்தப்பட இருக்கிறது. அந்த மாதத்தின் இறுதியிலேயே தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட இருக்கிறது. மேலும் விவரங்களுக்கு அந்தந்த ஊராட்சி ஒன்றியங்களைத் தொடர்பு கொள்ளலாம்.
ஊதியம், வயது வரம்பு
கிராம ஊராட்சி செயலராக பணியில் சேருவோருக்கு ஊதிய விகிதம் ரூ.15,900 முதல் ரூ.50,400 வரை என்ற அளவில் இருக்கும். கடந்த ஜூலை மாத நிலவரப்படி, பொதுப் பிரிவினருக்கு 18 முதல் 31 வயது வரையும், எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 18 முதல் 37 வயது வரையும் இருத்தல் வேண்டும். மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினரை சேர்ந்தவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை வயது வரம்பில் தளர்கள் வழங்கப்படும்.
10ம் வகுப்பு தேர்ச்சி அவசியம்
கல்வித் தகுதி குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எட்டாம் வகுப்பு வரை தமிழை ஒரு பாடமாக கொண்டு படித்திருக்க வேண்டும். தேர்வுக் கட்டணம், பொதுப் பிரிவினருக்கு ரூ.100 மற்றும் எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு ரூ.50 ஆக இருக்கும். நவம்பர் 9ம் தேதி விண்ணப்பிக்க கடைசி(Grama Panchayat Recruitment 2025 Last Date) நாளாகும்.
மேலும் படிக்க : கிராமப்புற வங்கிகள் 13,217 காலிபணியிடங்கள்:டிகிரி இருந்தால் போதும்
டிசம்பர் மாதம் நேர்காணல்
நேர்காணல் நடைபெறும் தேதி, 04-12-2025 முதல் 12-12-2025 வரை.தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதும், டிசம்பர் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் முடிவுகள் வெளியிடப்பட்டு, டிசம்பர் 17ம் தேதி பணி நியமன ஆணைகள் வழங்கப்படும்.
===============