Actor MNM Leader Kamal Haasan Rajya Sabha MP 
தமிழ்நாடு

Rajya Sabha: ”இந்தியனாக என் கடமையை செய்வேன்”: கமல்ஹாசன் வாக்குறுதி

Rajya Sabha MP Kamal Haasan : மாநிலங்களவை எம்பியாக பொறுப்பேற்கும் நான், எனது கடமையை ஆற்றுவேன் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Kannan

தமிழகத்தில் இருந்து புதிய எம்பிக்கள் :

Rajya Sabha MP Kamal Haasan : தமிழகத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர்களாக இருக்கும் 6 பேரின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. காலியாகும் அந்த இடங்களுக்கு தேர்தல் நடத்த அறிவிப்பு வெளியானது. திமுக சார்பில் 3 பேர், திமுகவின் தோழமை கட்சியான மக்கள் நீதி மய்யம்(MNM) சார்பில் ஒருவர், அதிமுக சார்பில் 2 பேர் மனுத்தாக்கல் செய்தனர். இவர்கள் 6 பேரும் போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டனர்.

எம்பியாக பதவியேற்கிறார் கமல்ஹாசன் :

இவர்கள் நாளை பதவியேற்றுக் கொள்கின்றனர்(Kamal Haasan Taking Oath As Rajya Sabha MP). மக்கள் நீதி மய்யம் சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்து எடுக்கப்பட்ட, அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன், டெல்லி செல்லும் முன்பு சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். ”நீங்கள் செய்தி சேகரிக்க மட்டும் இங்கு வரவில்லை. என்னை வாழ்த்தி அனுப்பவும் வந்து இருப்பதாக நான் நினைத்து கொள்கிறேன். அதற்கு நன்றி. உங்களின் வாழ்த்துக்களுடன், மக்களின் வாழ்த்துக்களுடன் நான் உறுதிமொழி எடுக்கவும், எனது பெயரை பதிவு செய்யவும் செல்கிறேன்.

இந்தியனாக கடமையாற்றுவேன் :

இந்தியனாக எனக்கு கொடுக்கப்பட்டு இருக்கும் மரியாதையையும், கடமையையும் நான் செய்ய போகிறேன். பெருமையுடன் சொல்லி கொள்கிறேன், கன்னிப்பேச்சு எதை மையப்படுத்தி இருக்கும்? என்ற கேள்விக்கு, அதை இப்போது சொல்ல கூடாது. அங்கே தான் பேச வேண்டும். சில விஷயங்கள் இங்கே பேசும் மாதிரி அங்கே பேச கூடாது. அங்கே பேசுகிற மாதிரி இங்கே பேச கூடாது என்றார்.

மேலும் படிக்க : Kamal MP : ராஜ்யசபா எம்பியாக கமல்ஹாசன் : 25ம் தேதி பதவியேற்கிறார்

பயணத்திற்கு விடை கிடைக்கும் :

6 ஆண்டு கால மாநிலங்களவை எம்பி பயணம் எதை நோக்கி இருக்கும்? என்ற கேள்விக்கு, அதற்கான விடை அங்கே கிடைக்கும். எனது பயணத்தை கவனித்தீர்கள் என்றால், நன்றாக புலப்படும் என்று, கமல்ஹாசன் பதிலளித்தார்.

---