Kamal MP : ராஜ்யசபா எம்பியாக கமல்ஹாசன் : 25ம் தேதி பதவியேற்கிறார்

Actor Kamal Haasan Take Oath as Rajya Sabha MP : திமுக கூட்டணி சார்பில் ராஜ்யசபாவிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வரும் 25ம் தேதி பதவியேற்கிறார்.
MNM Leader And Actor Kamal Haasan Take Oath as Rajya Sabha MP
MNM Leader & Actor Kamal Haasan Take Oath as Rajya Sabha MP
1 min read

Actor Kamal Haasan Take Oath as Rajya Sabha MP : தமிழகத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாக்க இருக்கும் 6 பேரின் பதவிக்காலம் வரும் 24ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. எனவே, புதிய உறுப்பினர்களை தேர்ந்து எடுக்க தேர்தல் அறிவிப்பாணை வெளியிடப்பட்டது.

ராஜ்யசபா ஆறு உறுப்பினர்கள் தேர்வு :

சட்டசபை உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில் திமுக 4 பேரையும், அதிமுக 2 பேரையும் தேர்வு செய்ய முடியும். அதன்படி, திமுக சார்பில் வழக்கறிஞர் வில்சன், ராஜாத்தி என்கிற கவிஞர் சல்மா, எஸ்.ஆர்.சிவலிங்கம் ஆகியோர் போட்டியிட்டனர். சட்டசபை தேர்தலின் போது செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி, மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டது. அதில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன்(Kamal Haasan) போட்டியிட்டார். அதிமுக சார்பில் ஐ.எஸ்.இன்பதுரை, ம.தனபால் வேட்புமனு தாக்கல் செய்தனர். ஆறுபேரும் போட்டியின்றி ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

ஜூலை 25ல் பதவியேற்கிறார் கமல்ஹாசன்:

அதன்படி, ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்பட்ட கமல்ஹாசன் வரும் 25ம் தேதி(Kamal Haasan Rajya Sabha MP Date) பதவியேற்கிறார். இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற ராஜ்ய சபா)தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன், ராஜ்யசபா உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.

ராஜ்ய சபா எம்பி பதவியேற்பு :

கமல்ஹாசன், வருகிற 25-ம் தேதி(Rajya Sabha MP Kamal Haasan) அன்று நாடாளுமன்றத்தில் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டு பதவியேற்கவுள்ளார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்" இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க : கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுத்த ஆஸ்கர் அகாடமி:தமிழ் சினிமா பெருமிதம்

முதன்முறையாக நாடாளுமன்றத்தில் கமல்ஹாசன்:

முதன்முறையாக நாடாளுமன்றத்தில் காலடி எடுத்து வைக்கும் கமல்ஹாசன்(Kamal Haasan), அரசியலில் தனது அடுத்தக்கட்ட பயணத்தை தொடங்குகிறார் என்றே கூற வேண்டும். சட்டமன்ற தேர்தலிலும் திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம்(MNM) தொடர இருப்பதால், அந்தக் கட்சியும் சில தொகுதிகளில் போட்டியிடும் எனத் தெரிகிறது.

=====

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in