Karnataka Dam Water Level Today in Tamil 
தமிழ்நாடு

காவிரியில் 95,000 கனஅடி நீர்திறப்பு: தமிழகத்துக்கு எச்சரிக்கை

Karnataka Dam Water Level Today in Tamil : கர்நாடக அணைகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டு வருவதால், காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

Kannan

காவிரியில் வெள்ளப் பெருக்கு :

Karnataka Dam Water Level Today in Tamil : கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து இருக்கிறது. இதன் காரணமாக கனமழை பெய்து வருவதால், அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் முழு கொள்ளளவை எட்டி விட்டதால், அணைக்கு வரும் நீர் அப்படியே காவிரியில் திறந்து விடப்படுகிறது

சீறிப்பாயும் காவிரி அன்னை :

கபினி அணையில்(Kabini Dam Water Level Today) இருந்து 25,000 கன அடியும், கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து 70,000 கன அடியும் திறக்கப்பட்டு வருவதால், இருகரைகளையும் தொட்டவாறு ஆக்ரோஷத்துடன் தமிழகத்தை நோக்கி பெருக்கெடுத்து வருகிறது. இதன் காரணமாக காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முழு கொள்ளளவை எட்டும் மேட்டூர் ஆணை :

மேட்டூர் அணையின் நீர்மட்டம்(Mettur Dam Water Level Today) இன்று காலை 117. 56 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 6,223 கன அடி வீதம் நீர் வந்து கொண்டிருந்த நிலையில், இன்று இரவுக்குள் 75,000 கனஅடி நீர் வர வாய்ப்பு இருப்பதால், கரையோர மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அணை முழு கொள்ளளவை எட்டியவுடன், உபரி நீர் முழுமையாக காவிரியில் திறந்து விடப்படும்.

மேலும் படிக்க : நீரின்றி காயும் ’கடைமடை விவசாயம்’ : காவிரி கரைபுரண்டும் அவலம்

11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை :

காவிரியை ஒட்டிய 11 மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. தாழ்வான பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு வருகிறார்கள். மேட்டூர் அணை(Mettur Dam) மீண்டும் முழு கொள்ளவை எட்டுவதால், காவிரி டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

==============