K.C. Venugopal stated that talk of individuals in the party about role in government is their personal opinion  google
தமிழ்நாடு

”யாருடன் கூட்டணி” கட்சி தலைமையே இறுதி முடிவு எடுக்கும் : K.C. வேணுகோபால் திட்டவட்டம்

ஆட்சியில் பங்கு குறித்து கட்​சி​யில் இருக்​கும் தனிநபர்கள் பேசுவது, அவர்களின் சொந்த கருத்து, அதற்​கும் காங்கிரஸ் கட்​சிக்​கும் எந்​தச் சம்பந்​தமும் இல்​லை கே.சி. வேணுகோ​பால் தெரி​வித்​துள்ளார்.

Kannan

திமுக - காங்கிரஸ் மோதல்

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஆட்சியில் பங்கு என்ற கோஷம் காங்கிரசில் வேகமாக எதிரொலிக்கிறது. இது திமுக கூட்டணிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.

கூட்டணி ஆட்சி ஒத்து வராது என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்த பிறகும், மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்ரவர்த்தி தங்கள் விமர்சனங்களை பொதுவெளியில் வைத்து வருகிறார்கள்.

இதற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய கட்டாயத்திற்கு காங்கிரஸ் தள்ளப்பட்டு உள்ளது. ஆட்சியில் பங்கு தேவை என்றால், தவெக கூட்டணிக்கு காங்கிரஸ் செல்ல வேண்டும்.

திமுக தலைவர்களும் கொந்தளிப்பில் இருப்பதால், கூட்டணி விரிசல் அதிகமாகும் எனத் தெரிகிறது.

தமிழக காங்கிரஸ் பாதயாத்திரை

இந்தநிலையில், தமிழகம் வந்துள்ள அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால், மத்​திய அரசைக் கண்டித்​து காங்கிரஸ் சார்பில் சென்​னை முகப்​பேரில் நடைபெற்ற பாத​யாத்​திரையில் கலந்து கொண்டார்.

மத்திய அரசு மீது குற்றச்சாட்டு

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”விவ​சா​யிகளுக்கு எதிரான போக்​ மத்​திய அரசு கடைப்​பிடித்து வரு​கிறது.

இந்​தி​யா அமெரிக்கா இடையே போடப்​பட்​டுள்ள புதிய ஒப்​பந்​தத்​தால் அமெரிக்​கா​வின் கார்ப்​பரேட் நிறு​வனங்​கள் இந்​தி​யா​வுக்​குள் ஊடுரு​வும்.

இதனால் நாட்​டின் முது​கெலும்​பான விவ​சா​யிகள் கடுமை​யாகப் பாதிக்​கப்​படு​வார்​கள்.

அமெரிக்காவிடம் இந்தியா சரண்

ஏற்​கெனவே ஜவுளித் தொழில் பெரும் வீழ்ச்​சி​யைச் சந்​தித்​துள்ள நிலை​யில், இந்த ஒப்​பந்​தம் மூலம் இந்​தி​யா​வையே அமெரிக்​கா​விடம் மத்​திய அரசு சரணடையச் செய்​துள்​ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்​தியா பற்றி தொடர்ந்து பேசி வருகிறார்.

இந்திய அரசு மவுனம்

ஆனால் இந்​திய அரசோ மவுனம் காத்து வரு​கிறது. நாடாளு​மன்​றத்தில் ஜனநாயகம் முடக்​கப்​பட்​டுள்​ளது. எதிர்க்​கட்சிகள் பேச முடி​யாத சூழல் உள்ளது. மக்கள் பிர​தி​நி​தி​களின் உரை அவை குறிப்​பில் நீக்​கப்​படு​கின்றன.

திமுக-காங்கிரஸ் உறவு பலமானது

திமுக- காங்​கிரஸ் இடையே​யான உறவு என்​பது மிக நீண்ட கால மற்​றும் கொள்கைரீதி​யான கூட்​ட​ணி. பல்​வேறு விவ​காரங்​களில் மத்​திய அரசை எதிர்த்து நாங்கள் இணைந்து போராடி வரு​கிறோம்.

காங்கிரஸ் கட்சி தெளிவாக உள்ளது

அந்த ஒற்​றுமை இப்போதும் தொடர்​கிறது. தேர்​தல் நெருங்​கும் வேளையில், எங்​களுக்கும் எங்​களு​டைய கூட்​ட​ணிக் கட்​சிகளுக்​கும் தெளி​வான இலக்​கு​கள் உள்​ளன.

தொகு​திப் பங்​கீடு பேச்​சு​வார்த்​தைக்​காக நாங்​கள் காத்​திருக்​கிறோம்.

கூட்டணி ஆட்சி - தனிநபர் கருத்து தான்

கூட்​டணி ஆட்சி குறித்து கட்​சி​யில் இருக்​கும் தனி​நபர்​கள் யாராவது கருத்​துச் சொன்​னால், அது அவர்​களின் சொந்​தக் கருத்துக்களே தவிர, அதற்​கும் கட்​சிக்​கும் எந்​தச் சம்​பந்​த​மும் இல்​லை.

கட்சி தலைமையே இறுதி முடிவு

கூட்​டணி மற்​றும் அதன் முடிவு​கள் குறித்து அகில இந்​தி​யத் தலைமை மட்​டுமே இறு​தி முடிவெடுக்​கும். இவ்​வாறு கூறினார்.

முன்​ன​தாக நடந்த மாவட்ட தலை​வர்​கள் கூட்​டத்​தில், ‘கூட்டணிக் குறித்து பொது​வெளி​யில் பேசக்​கூ​டாது. மீறி பேசுவோர் மீது நடவடிக்கை எடுக்​கப்​படும் எனத் தீர்மானம் நிறைவேற்​றப்​பட்​டது.

காங்கிரசுக்கு திமுக நிபந்தனை

சர்ச்​சைக்​குரிய வகை​யில் பேசுவோர் மீது நடவடிக்கை எடுத்​தால் மட்​டுமே கூட்​டணி தொடர்​பான பேச்​சு​வார்த்​தைக்கு முன்​வரு​வோம் என்று திமுக தரப்​பில் கூறப்பட்டு இருப்பதாக தெரிகிறது.

மேலும் படிக்க : “அச்சம் இல்லை, அச்சமென்பது இல்லையே” : மாணிக்கம் தாகூர் பதிவு

தமிழக காங்கிரசில் பரபரப்பு

மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்ரவர்த்தி மீது கட்சித் தலைமை நடவடிக்கை எடுத்தால், தமிழக காங்கிரசுக்குள் பிளவு ஏற்படும். தேர்தல் நேரத்தில் இப்படி நடந்தால், அது வெற்றி வாய்ப்பை பாதிக்கும் என்பதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

==========