“அச்சம் இல்லை, அச்சமென்பது இல்லையே” : மாணிக்கம் தாகூர் பதிவு

Congress MP Manickam Thakur : காங்கிரஸ் ஆட்சியில் பங்கு வேண்டும் என்பதை வலியுறுத்தி வரும் நிலையில் . மாணிக்கம் தாகூர், 'அச்சம் இல்லை' என பாரதியாரின் வரிகளை மேற்கோள் காட்டி பதிவிட்டுள்ளார்
Congress MP Manickam Thakur recent x post urges to DMK Government on Power sharing in Tamil Nadu
Congress MP Manickam Thakur recent x post urges to DMK Government on Power sharing in Tamil NaduSource : X
2 min read

ஆட்சியில் பங்கு :

Congress MP Manickam Thakur : தமிழக சட்டப்பேரவை தேர்தல் இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்க உள்ள நிலையில் ,ஆட்சியில் பங்கு வேண்டும் என காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர், கூட்டணி குறித்த தனது கருத்துகளை தொடர்ச்சியாக அனைத்து இடங்களிலும் பேசி வருகிறார் .

தொடர்ந்து வலியுறுத்தி வரும் மாணிக்கம் தாகூர்

2021-ல் திமுக 173 தொகுதியில் போட்டியிட்டு 133 இடங்களில்தான் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி கேட்பது நீங்கள் தோற்ற அந்த இடங்களைத்தான் அதிகாரப் பகிர்வு என்பது அவசியம்.

ஆட்சியில் பங்கு கேட்பது எங்களுடைய உரிமை என்றும் சமீபத்தில் பதிவிட்டிருந்த தாகூர் ஆட்சியில் பங்கை மக்கள் தீர்மானிப்பார்கள் அண்மையில் தெரிவித்தார்.

மேலும் படிக்க :‘அதிகாரத்தில் பங்கு’ காங்கிரஸ் நிலைப்பாடு: மாணிக்கம் தாகூர் பதிலடி

கூட்டணி இருந்தால் தான் வெற்றி

இந்தநிலையில், காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் தமது எக்ஸ் பக்கத்தில், தமிழ்நாட்டில் கூட்டணியே அரசியல் உண்மை.

ஒவ்வொரு கட்சிக்கும் தங்களுக்கான வாக்கு ஆதரவு உள்ளது. இந்த ஆதரவு காங்கிரஸ் மட்டுமல்ல, மற்ற கட்சிகளின் எண்ணிக்கைகளும் முழுமையாக பிரதிபலிக்கப்படவில்லை என நினைக்கிறேன்.

ஆனால் கூட்டணி இல்லாமல் தமிழ்நாட்டில் யாரும் வெல்ல முடியாது என்வவும் கூறியிருந்தார்.

மக்களே முடிவு செய்யட்டும்

”மக்கள் முடிவு செய்வார்கள். கூட்டணி ஆட்சியா? அல்லது ஒரு கட்சி ஆட்சியா என்பதை மக்களே முடிவு செய்வார்கள் என்று ஆட்சியில் பங்கு குறித்து பதிவிட்டுள்ளார்

2006 தேர்தலில் நடந்தது என்ன

2006 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக 96 இடங்களிலும் காங்கிரஸ் 34 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில் திமுக ஆட்சி அமைக்க 118 இடங்கள் கிடைக்காததால் காங்கிரஸ் திமுகவிற்கு ஆதரவளித்தது.

5 ஆண்டுகளும் நிபந்தனையற்ற ஆதரவை தந்த காங்கிரஸ், திமுக சுமூகமாக ஆட்சி நடத்த உதவியாக இருந்தது.

இதை சுட்டிக்காட்டி மாணிக்கம் தாகூர் ஆட்சியில் பங்கு கேட்ப்பது உரிமை என்று குறிப்பிட்டுள்ளார் .

மேலும் படிக்க : அதிகார பகிர்வு, ஆட்சியில் பங்கு உரிமை : சீறும் மாணிக்கம் தாகூர்

திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி கூட்டணியில் சலசலப்பு

ஆட்சியில் பங்கு வேண்டும் என்று‘‘தேர்தலில் அதிக இடங்களை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் பிரதிநிதிகள் தொடர்ந்து பொதுவெளியில் பேசி வரும் நிலையில் இது திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது .

புகாருக்கு மத்தியில் மாணிக்கம் தாகூரின் எக்ஸ் தள பதிவு

இந்த பெரும் ஆட்சியில் பங்கு புகாருக்கு இடையில் மாணிக்கம் தாகூர் தன் எக்ஸ் தள பதிவில் “அச்சம் இல்லை.. அச்சம் இல்லை.. அச்சமென்பது இல்லையே” என்ற பாரதியாரின் வரிகளை பதிவிட்டுள்ளார்.

இந்தப் பதிவின் மூலம் திமுகவிற்கு மாணிக்கம் தாகூர் நேரடி சவால் விடுத்து இருப்பதாகவே பார்க்கப்படுகிறது.

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை பெங்களூருவில் சந்தித்து பேசினார். அப்போது மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்ரவர்த்தி குறித்து அவர் எடுத்து கூறியதாக தெரிகிறது.

அதையும் மீறி மாணிக்கம் தாகூர் பதிவு வெளியிடுவதை பார்க்கும் போது, ராகுல் காந்தியின் மறைமுக ஆதரவு இருக்கும் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

=====

ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற விவாதத்தில் திமுக - காங்கிரஸ் இடையே சமீபகாலமாக தொடர் முரண்பாடுகள் இருந்து வரும் நிலையில், தொகுதிப் பங்கீட்டுக்கான குழு அமைக்காமலேயே திமுக இருந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in