Kodaikanal Landslide Risk Identified: source:google,thamizhalai
தமிழ்நாடு

15 இடங்களில் நிலச்சரிவு அபாயம்: கொடைக்கானலில் 28 பேர் கொண்ட சிறப்பு பேரிடர் மேலாண்மைக் குழு அமைப்பு!

கொடைக்கானலில் குருசரடி, சவரிக்காடு உட்பட 15 இடங்களில் நிலச்சரிவு அபாயம் கண்டறியப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணிகளுக்காக 28 பேர் கொண்ட சிறப்பு மீட்புக் குழு அமைப்பு.

Kavitha prasanna

The risk of landslides has been identified at 15 locations in Kodaikanal, including Gurusaradi and Savarikadu. A special 28-member rescue team has been formed for safety operations.

15 இடங்களில் நிலச்சரிவு அபாயம்

கொடைக்கானல் மலைப்பகுதியில் பேரிடர் மேலாண்மைக் குழுவினர் சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டனர். இதில் குருசரடி, சவரிக்காடு, கோம்பைக்காடு உள்ளிட்ட 15 இடங்களில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கட்டிடங்களின் காடாக மாறிவரும் கொடைக்கானல்

கடந்த சில ஆண்டுகளாக விவசாய நிலங்களை அழித்தும், மலையை வெட்டியும் சட்டத்திற்குப் புறம்பாக அதிக அளவில் காட்டேஜ்கள் மற்றும் ரிசார்ட்டுகள் கட்டப்பட்டு வருவதால், கொடைக்கானல் மலைப்பகுதி கட்டிடங்களின் காடாக மாறி வருகிறது.

பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை

இதன் காரணமாகவே மழைக்காலங்களில் நிலச்சரிவு அபாயம் அதிகரித்துள்ளதாக பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரித்துள்ளது.

28 பேர் கொண்ட சிறப்புக் குழு அமைப்பு

நிலச்சரிவைத் தடுப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை இணைந்து மேற்கொண்டு வருகின்றன.

இதன்காரணமாக வருவாய்த்துறை, தீயணைப்புத் துறை, ஊரக வளர்ச்சித் துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கி 28 பேர் கொண்ட சிறப்பு பேரிடர் மேலாண்மைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

உபகரணங்களுடன் மீட்புக் குழு தயார் நிலை

கனமழையின் போது மண்சரிவு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உடனடியாக மீட்புப் பணிகளை மேற்கொள்ள ஏதுவாகப் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

அதன்படி மணல் மூட்டைகள், மரம் வெட்டும் கருவிகள், பொக்லைன் இயந்திரங்கள், மீட்பு வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து உபகரணங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைப்பதைத் தடுத்து நிறுத்தியது இடதுசாரிகள் தான்: சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் பேச்சு!

======