திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைப்பதைத் தடுத்து நிறுத்தியது இடதுசாரிகள்தான்: சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் பேச்சு!

திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைப்பதைத் தடுத்து நிறுத்தியது இடதுசாரி கட்சிகள்தான் என்றும் பெ.சண்முகம் பேசியுள்ளார்.
CPM State Secretary Statement
CPM State Secretary Statementsource:thamizhalai,google,ai generated
1 min read

CPM State Secretary Statement: Left Parties Prevented ADMK-DMK Alliance

திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைப்பதைத் தடுத்து நிறுத்தியது இடதுசாரிகள்தான் என்று தாராபுரம் பொதுக்கூட்டத்தில் சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் பேசியுள்ளார்.

தாராபுரம் பொதுக்கூட்டத்தில் பெ.சண்முகம் பேச்சு

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைப்பதைத் தடுத்து நிறுத்தியது இடதுசாரி கட்சிகள்தான் என்று பொதுக்கூட்டத்தில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.

தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் லட்சுமணனை ஆதரித்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் கலந்துகொண்டு பேசினார்.

தவெக மற்றும் முதல்வர் விஜய்க்கு கேள்வி

கூட்டத்தில் அவர் பேசும் போது, தவெக தரப்பில் இருந்து எந்தவிதமான எதிர்பார்ப்புகளும், உறுதிமொழியும் அளிக்கப்படாமல்தான் மதுராந்தகம், தாராபுரம் தொகுதியில் இரண்டு வேட்பாளர்களும் ராஜிநாமா செய்தார்களா என்பதற்கு முதல்வர் விஜய்யோ அல்லது மற்ற அமைச்சர்களோ பதில் சொல்லவில்லை என்று சுட்டிக்காட்டினார்.

தடுத்து நிறுத்தியதே இடது சாரிகள் தான்

மீண்டும் மீண்டும் அவர்கள் சொல்வது திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைக்க முயற்சித்தது என்றுதான். சொல்லப்போனால் திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சி அமைப்பதைத் தடுத்து நிறுத்தியது இடதுசாரி கட்சிகள்தான் என்றும் பெ.சண்முகம் பேசியுள்ளார்.

எதிர்க்கட்சிகளை தோற்கடிக்க அழைப்பு

ஆட்சி அமைக்க பெரும்பான்மை இல்லாதபோது வராமல், பெரும்பான்மை நிரூபிக்கப்பட்ட பின்னரே இருவரும் அதிமுகவில் இருந்து விலகி தவெகவிற்கு வந்தனர்.

அதிமுக மற்றும் பாஜக கூட்டணியை தொடர்ந்து எதிர்த்து வருகிறோம் என்றும், அவர்கள் உள்பட ஏனைய வேட்பாளர்களையும் தோற்கடிக்க வேண்டும் என்றும் பெ.சண்முகம் அந்த பொதுக்கூட்டத்தில் பேசினார்.

இதையும் படிங்க : ராமேஸ்வரத்திற்கு நெரிசல் இன்றி பயணம் : அக்.1 முதல் கூடுதல் ரயில் பெட்டிகள் : ரயில்வே நடவடிக்கை, பயணிகள் வரவேற்பு..!

=======

logo
Thamizh Alai
www.thamizhalai.in