BJP President Nainar Nagendran on Chennai Municipal Toilet 
தமிழ்நாடு

கழிவறை பராமரிப்புக்கு 1,000 கோடி! ஆனால் தரம்? : நயினார் காட்டம்

Nainar Nagendran on Chennai Municipal Toilet : சென்னையில் மாநகராட்சி கழிவறை பராமரிப்புக்கு திமுக அரசு 1,000 கோடியை செலவிட்டும், தரம் மோசமாக இருப்பதாக நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Kannan

கழிவறைகளை சுத்தம் செய்ய ரூ.1,000 கோடி :

Nainar Nagendran on Chennai Municipal Toilet : இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” சென்னை மாநக​ராட்​சி​யின் 1,260 இடங்​களில் உள்ள 10,000 பொதுக் கழி​வறை​களை சுத்​தம் செய்​வதற்​காக, தூய்மை இந்​தியா திட்​டத்​தின் கீழ் ரூ.620 கோடி​யும், ராயபுரம் மற்​றும் திரு​விக நகர் மண்​டலங்​களில் உள்ள பொதுக் கழி​வறை​களைத் தனி​யார்​ மய​மாக்​கு​வதற்கு ரூ.430 கோடி​யும் என திமுக ஆட்​சி​யில் இது​வரை சுமார் ரூ.1000 கோடி செல​விடப்​பட்​டும் பொதுக் கழி​வறை​களின் தரம் மிக மோச​மாக உள்​ளது தெரிய வந்திருக்கிறது.

கழிவறைகளில் அடிப்படை வசதி இல்லை :

தற்​போதுள்ள முக்​கால்​வாசி பொதுக் கழி​வறை​கள் தண்​ணீர், கதவு, தாழ்ப்​பாள் போன்ற அடிப்​படை வசதி​கள் இல்​லாமல் தரையெல்​லாம் கறைபடிந்து, துர்​நாற்​றம் வீசுகின்றன என்​பது திமுக அரசின் ஊழல் முகத்தை நமக்கு வெளிச்​சம் போட்​டுக் காட்டுகிறது.

காணாமல் போன மகளிர் கழிவறைகள் :

2023ல் மகளிர் நலனுக்​காக ரூ.4.5 கோடி நிதி செல​வில் அறி​முகப்​படுத்​தப்​பட்ட “ஷீ டாய்​லெட்" என்ற நடமாடும் மகளிர் கழி​வறை​கள், ஒராண்​டுக்​குள் காணா​மல் போய் விட்ட நிலை​யில், மீதமிருக்​கும் கழி​வறை​களும் மக்​கள் பயன்​படுத்த முடியாத நிலை​யில் கிடப்​பது மிகப்​பெரும் சுகா​தார சீர்​கேட்​டுக்கு வழி​வகுக்​கும் என்​பது ஆளும் அரசுக்கு தெரி​யா​தா?

அலங்கோல பராமரிப்புக்கு ஆயிரம் கோடியா? :

அலங்கோல​மாகக் காட்​சி​யளிக்​கும் கழி​வறை​களைப் பராமரிக்க ஆயிரம் கோடி ரூபாய் செல​வானது என அரசு கணக்கு காட்​டு​வது யார் காதில் பூ சுற்​று​வதற்​காக? இவர்​கள் கொள்​ளை​யடிக்​கும் மக்​கள் பணம் யாருக்கு செல்​கிறது, எங்கே செல்​கிறது? ஊழல் முறை​கேடு​களுக்​குப் பெயர் போன திமுக, தனது ஆட்​சி​யின் இறு​திக் காலத்​தில் கழி​வறை​யிலும் கொள்​ளை​யடித்து கஜா​னாவை நிரப்​பிக் கொள்ள துணிந்​துள்​ளது அரு​வருக்​கத்​தக்​கது. இந்த ஆட்​சியை அரியணை​யில் இருந்து அகற்​றி​னால் மட்​டுமே தமிழகம் புத்​துணர்வு பெறும்” இவ்வாறு தனது அறிக்கையில் நயினார் நாகேந்திரன்(Nainar Nagendran) கடுமையாக சாடியுள்ளார்.

மேலும் படிக்க : நெல்லை ஆணவப் படுகொலை : வழக்கை மூடி மறைக்க முயலும் காவல்துறை