Madurai High Court on Thiruchendur Murugan Temple Darshan Ticket Illegal Sales 
தமிழ்நாடு

திருச்செந்தூர் சட்ட விரோதமாக தரிசன டிக்கெட்: நீதிமன்றம் எச்சரிக்கை

Thiruchendur Murugan Darshan Ticket : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சட்டவிரோத தரிசன டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

Kannan

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் :

Thiruchendur Murugan Temple Darshan Ticket : தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணி சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக் கணக்கானோர் வந்து வழிபட்டு செல்கிறார்கள். இலவச தரிசனம் இருந்தாலும், கோவில் நிர்வாகம் தரப்பில் சிறப்பு தரிசன கட்டணமாக 100 ரூபாய் வசூலிக்கப்படுகிறது . கோவிலின் இணையதளத்திலேயே பூஜைக்கான டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம்.

கள்ள சந்தையில் தரிசன டிக்கெட் :

கடந்த மாதம் 26ஆம் தேதி திருச்செந்தூர் சுப்பிரமணி சுவாமி கோவிலுக்கு பக்தர்கள் சென்ற போது, நேரடியாக 100 ரூபாய் டிக்கெட் பெற்று வந்த பலர், ஆன்லைன் மூலம் டிக்கெட்(Thiruchendur Murugan Temple Darshan Ticket Online) வந்தவர்களை மீறிச் செல்ல முயன்றனர். இதனால், முறையாக வந்த பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகினர். கோவிலால் அங்கீகரிக்கப்படாத சில நபர்கள், பூசாரிகள் எனும் பெயரில் இது போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு பண மோசடி செய்து வருவது தெரிய வந்தது.

மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு :

இதுதொடர்பாக சென்னை சேர்ந்த சண்முகராஜன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை(Madurai High Court Bench) அமர்வில் பொதுநல வழக்கினை தாக்கல் செய்திருந்தார். ” சட்ட விரோத கும்பலால் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு மன உளைச்சல் ஏற்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக அதிகாரிகளிடம் முறையிட்டும், நடவடிக்கை எடுக்கப்படாமல் நிலுவையில் உள்ளது.

சட்ட விரோதமாக டிக்கெட் விற்பனை :

ஆகவே கோவிலின் தரிசன நுழைவு அவற்றின் கட்டண விலை ஆகியவற்றை முறைப்படுத்தவும் அங்கீகரிக்கப்படாத நபர்கள், புரோக்கர்கள் டிக்கெட் விற்பனை செய்து பணம் வசூலிப்பதை தடுக்கவும் அந்த டிக்கெட்டுகளை பயன்படுத்தி பக்தர்கள் கோவிலுக்குள் நுழைவதைத் தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" எனக் கோரியிருந்தார்.

தரிசன டிக்கெட் - அரசு விளக்கம் :

நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், அருள் முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, அரசு தரப்பில், "கோவிலின் திரிஹரசுந்தரர்களே தரிசன டிக்கெட் விற்பனை(Darshan Ticket) செய்யும் செயல்களில் ஈடுபட்டுள்ளனர். இதனை தடுக்கும் விதமாக கோவிலை சுற்றி தகவல் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன" எனத் தெரிவிக்கப்பட்டது.

நிம்மதி தேடியே கோவிலுக்கு வருகை :

இதையடுத்து நீதிபதிகள், " கோவிலுக்கு வருவது நிம்மதியை தேடியே. அங்கும் சட்டவிரோத செயல்கள் நடைபெறுவதை ஏற்க இயலாது எனக் குறிப்பிட்டு தூத்துக்குடி எஸ்.பியை வழக்கில் சேர்த்து உத்தரவிட்டனர். மேலும் கோவிலின் பாதுகாப்பிற்கு தேவைப்படும் கூடுதல் காவலர்களை பணியில் அமர்த்தவும் ஆணை பிறப்பித்தனர்.

மேலும் படிக்க : திருச்செந்தூர் ஆவணித் திருவிழா கொடியேற்றம் : 23ல் தேரோட்ட வைபவம்

குற்றவியல் நடவடிக்கை எடுக்க உத்தரவு :

இந்து சபை அறநிலையத்துறையும் காவல்துறையும் இணைந்து சம்பந்தப்பட்ட நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கையை எடுக்க வேண்டும். அமைதியான முறையில் சாமி தரிசனம் செய்வதை உறுதிப்படுத்த வேண்டும்” எனவும் உத்தரவிட்ட நீதிபதிகள், பதில் மனு தாக்கல் செய்யக் கூறி, விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

=============