
திருச்செந்தூர் ஆவணித் திருவிழா :
Thiruchendur Murugan Avani Festival 2025 Date : முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஒன்று ஆவணித் திருவிழா.இந்த ஆண்டு ஆவணித் திருவிழா இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கொடி மரத்திற்கு சிறப்பு பூஜை :
திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயில்(Tiruchendur Subramanya Swamy Temple) கொடியேற்றத்தை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு 1.30 விஸ்வரூபம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. இதனையடுத்து கோயில் உள்பிரகாரத்தில் உள்ள செப்பு கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதன் பிறகு மேளதாளங்கள் முழங்க கொடியேற்றப்பட்டது. மகா தீபாராதனை நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுப்பிரணியரை வழிபட்டனர்.
வாகனங்களில் எழுந்தருளும் சுப்பிரமணியர் :
12 நாட்கள் நடைபெறக் கூடிய திருவிழாவில் ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலையில் சுவாமி, அம்பாள் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலாவரும் நிகழ்ச்சி நடக்கும். விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 23ம் தேதி சனிக்கிழமை(Thiruchendur Murugan Avani Festival 2025 Date) நடக்கிறது. அன்று காலை 7 மணிக்கு மேல் தேரோட்டம் நடக்கிறது.
மேலும் படிக்க : Avani Avittam : ஆவணி அவிட்டம் : ஆன்மிக முக்கியத்துவமும் புனிதமும்
பக்தர்கள் வருகை அதிகரிப்பு :
ஆவணித் திருவிழாவை(Avani Festival 2025 Tiruchendur) ஒட்டி திருச்செந்தூர் கோவில் விழாக்கோலம் பூண்டிருக்கிறது. நாள்தோறும் ஆயிரக் கணக்கான பக்தர்கள் வரும் நிலையில், தொடர் விடுமுறை வர இருப்பதால், கூடுதலாக பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
===============