முன்னோர்கள் பூமிக்கு வரும் காலம் :
Mahalaya Amavasya 2025 Tithi Timings in Tamil : மறைந்த நமது முன்னோர்கள் மொத்தமாக ஒருசேரக் கூடும் காலமே மகாளய பட்சம். மகாளய என்றால் "கூட்டாக வருதல்" என்று பொருள். அதாவது, மறைந்த முன்னோர்கள், 15 நாட்கள் நம்மோடு தங்கக்கூடிய காலத்தையே மகாளய பட்சம்(Mahalaya Paksham) என்று அழைக்கிறோம். அதிலும் புரட்டாசி மாதம் வரும் அமாவாசை என்பதால், இது மிகவும் யிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
முக்கியமான நாள் மகாளய அமாவாசை :
புரட்டாசி மாதம்(Purattasi Month) வரும் அமாவாசை அன்று மட்டுமே முன்னோர்கள் நம்முடன் தங்கியிருந்து ஆசி வழங்குவதாக கருதப்படுகிறது. எனவே, ஆடி அமாவாசை, தை அமாவாசை போன்ற முக்கிய நாட்களில் முன்னோர்களுக்கு திதி கொடுக்க மறந்தவர்களும்(Mahalaya Amavasya Tithi Tharpanam), பெற்றோரின் இறந்த திதி தேதி தெரியாதவர்களும் மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால் போதும்.
சாபங்களை போக்கும் மகாளய அமாவாசை :
பித்ரு தோஷம், பித்ரு சாபங்கள் எதுவானாலும், இந்த மகாளய அமாவாசையின்போது அதன் ஆற்றலும், தாக்கமும் குறைந்துவிடும் என்ற நம்பிக்கையும் உள்ளது. ’மகாளய பட்சம் செய்யாதவனுக்கு மங்களம் உண்டாகாது’ என்பது பழமொழி. எனவே, எந்த அமாவாசையில் விரதமிருந்து, முன்னோர்களை வழிபட தவறினாலும், மகாளய அமாவாசை அன்று விரதமிருந்து, தர்ப்பணம் கொடுத்தால், ஆண்டு முழுவதும் அமாவாசை விரதமிருந்து தர்ப்பணம்(Mahalaya Amavasya Benefits in Tamil) கொடுத்த பலனை பெறலாம் என்று சொல்லப்படுகிறது.
ஓடுகிற நீரில் தர்ப்பணம் கொடுங்க :
2025ம் ஆண்டுக்கான மகாளய பட்சம் கடந்த 8ம் தேதி திங்கட்கிழமை தொடங்கிய நிலையில், 21 ஆம் தேதி ( ஞாயிற்றுக்கிழமை - நாளை ) மகாளய அமாவாசை(Mahalaya Amavasya 2025 Date) வருகிறது. இன்றைய முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது முக்கியமானது. அமாவாசை காலகட்டம் என்பது எப்பேர்ப்பட்ட பித்ரு சாபத்தையும் நீக்கும் வல்லமை கொண்டது. முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் போது இடமும் மிகவும் முக்கியமானது. தேங்கியிருக்கும் நீரில் தர்ப்பணம் செய்யக்கூடாது. ஓடுகிற நீர் இருக்கும் இடத்தில் தான் தர்ப்பணம் செய்ய வேண்டும். அதாவது, ஆற்றங்கரை அல்லது கடற்கரையை தேர்ந்தெடுப்பது சிறப்பு.
திதி கொடுக்க உகந்த நேரம் :
புரட்டாசி மாத மகாளய அமாவாசை நாளில் திதி கொடுக்க உகந்த நேரம் காலை 6 மணியிலிருந்து மதியம் 1 மணி வரை ஆகும். அந்த நேரத்தில் தர்ப்பணம்(Mahalaya Amavasya 2025 Timings) கொடுக்கலாம். ராகு காலம் மற்றும் எமகண்ட நேரத்தை தவிர்க்க வேண்டும். அதிகாலை முதல் காலை 7 மணி வரை கொடுப்பது சிறப்பு மிக்கதாக அமையும். தர்ப்பணம் கொடுக்க முடியாதவர்கள் அன்னதானம் செய்து பித்ருக்களை வழிபடலாம். காலையில் சூரிய உதயத்தின் போது தர்ப்பணம் கொடுப்பது, அதிக பலன்களை கொடுக்கும்.
வீட்டில் வழிபாடு செய்யும் முறை :
வீட்டுக்கு வந்து முன்னோர்களின் படத்தை மலர்களால் அலங்கரித்து(Mahalaya Amavasya at Home), அகல் தீபத்தில் நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும். அவர்களுக்கு பிடித்த பொருட்களை எல்லாம் வைத்து தீபாராதனை காண்பிக்க வேண்டும். முறையாக வணங்கிய முதல் உணவை காக்கைக்கும், இரண்டாவது உணவை அந்த ஊரில் ஏழ்மை நிலையில் இருப்பவருக்கும் கொடுத்து விட்டு, பின்பு குடும்பத்தில் இருப்பவர்கள் சாப்பிட வேண்டும்.
மேலும் படிக்க : மகாளய அமாவாசை 2025: முன்னோருடன், குலதெய்வ வழிபாடு : புண்ணியம் சேரும்
தர்ப்பணம் கொடுத்து முன்னோர் ஆசியை பெறுவோம் :
வசிஷ்டர், தசரதர், துஷ்யந்தன், நளன், அரிச்சந்திரன், ராமபிரான், தர்மர் ஆகியோர் மகாளயம் செய்து பெரும் பேறினை பெற்றனர். நாம் இந்த உலகிற்கு வர காரணமாக இருந்த முன்னோரை, மறக்காமல் தர்ப்பணம் கொடுத்து அவர்களை மனநிறைவு பெறச் செய்து ஆசிகளை பெறுவோமாக.
================