மகாளய அமாவாசை : முன்னோருடன், குலதெய்வ வழிபாடு : புண்ணியம் சேரும்

Mahalaya Amavasya 2025 Pithru Tharpanam With Ancestry : மகாளய அமாவாசை அன்று பித்ரு வழிபாட்டுடன், குலதெய்வ வழிபாடும் செய்வதால், அனைத்து தோஷங்களும் நீங்கி புண்ணியங்கள் வந்து சேரும்.
Mahalaya Amavasya 2025 Pithru Tharpanam With Ancestry in Tamil
Mahalaya Amavasya 2025 Pithru Tharpanam With Ancestry in Tamil
2 min read

குடும்பத்தினரை காண பித்ருக்கள் வருகை :

Mahalaya Amavasya 2025 Pithru Tharpanam With Ancestry : புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை 'மகாளய அமாவாசை' என்று போற்றப்படுகிறது. ஆவணி மாத பவுர்ணமிக்கு பிறகு பிரதமை நாள் தொடங்கி, அடுத்த 15 நாட்களும் 'மகாளய பட்சம்' ஆகும்(Mahalaya Paksham). மகாளய பட்ச காலத்தின் நிறைவாக வருவதே மகாளய அமாவாசை. 15 நாட்களில் முன்னோர்கள், பித்ரு லோகத்தில் இருந்து தங்கள் குடும்பத்தாரை காண பூமிக்கு வருவதாக ஐதீகம்.

முன்னோர்கள் மகிழ்ந்தால் புண்ணியம் சேரும் :

முன்னோர்கள் மகிழ்ச்சியாக இருந்தால் தான், பூமியில் உள்ள அவர்களின் குடும்பத்தினரும் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஒவ்வொரு வருடமும், முன்னோர் இறந்த திதி நாளை கணக்கில் கொண்டே திதி கொடுக்கப்படுவது வழக்கம். ஆடி அமாவாசை(Aadi Amavasya), தை அமாவாசை நாட்களில் தர்ப்பணம் செய்வது நல்லது. முன்னோர்களின் திதி நாள், ஆடி அமாவாசை, தை அமாவாசை ஆகிய நாட்களில் தர்ப்பணம் செய்ய தவறியவர்கள் மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம்(Pithru Tharpanam on Mahalaya Amavasya) செய்யலாம். முன்னோர்கள் இறந்த திதி தெரியாதவர்கள் கூட மகாளய பட்சத்தில் அவர்களுக்கு செய்யும் தர்ப்பணம் முழுமையாக சென்று சேரும் என்பது முன்னோர்கள் வாக்கு.

எல்லோருக்கும் தர்ப்பணம் கொடுக்கும் நாள் :

பொதுவாக அமாவாசை நாட்களில் மூன்று தலைமுறை முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வார்கள். ஆனால், மகாளய அமாவாசையன்று தாய்வழி, தந்தைவழி உறவினர்களுக்கு மட்டுமில்லாமல்(Mahalaya Amavasya Tharpanam), ஆசிரியர்கள், உறவினர்கள், நண்பர்கள், பங்காளிகள் என்று அனைவருக்குமே தர்ப்பணம் கொடுக்கலாம். இதுவே மகாளய அமாவாசையின் தனிச் சிறப்பாகும்.

தர்ப்பணத்திற்காக காத்திருக்கும் முன்னோர்கள் :

மகாளய பட்ச காலத்தில் முன்னோர்கள், அவர்களின் சந்ததியினர் செலுத்தும் தர்ப்பணத்திற்காகக் காத்திருப்பார்கள் என்று கருதப்படுகிறது. அதனால் அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் அன்றைய தினம் அவர்களுக்கு பிடித்த உணவை படைது வழிபட வேண்டும். பித்ருக்கள் வழிபாட்டில் கருப்பு எள்ளும், தர்ப்பை புல்லும் முக்கிய பங்கு வகிக்கின்றன. தர்ப்பணத்தின்போது முன்னோர்களுக்கு கொடுக்கும் எள்ளும், தண்ணீரும்தான் அவர்களுக்கான உணவாக கருதப்படுகிறது.

மகாளய அமாவாசையில் குலதெய்வ வழிபாடு :

மகாளய அமாவாசை அன்று, பித்ரு வழிபாட்டுடன் குல தெய்வ வழிபாடு(Kuladeivam Pooja on Mahalaya Amavasya) செய்வது சிறந்தது. இவ்வாறு வழிபடுவதால், அதுவரை குலதெய்வத்தை தொழாத பாவமும், தோஷமும் நம்மை விட்டு நீங்கும், வாழ்க்கை சிறப்பாக அமையும் என்பது நம்பிக்கை. அதுபோல அன்றைய தினம் காகத்திற்கு உணவு படைத்து வழிபட வேண்டும். இந்த உணவு முன்னோர்களுக்கு படைக்கப்படுவதாகவே புராணங்கள் கூறுகின்றன.

மேலும் படிக்க : மகாளய அமாவாசை: நீத்தாருக்கான கடன்களை நிறைவேற்றும் புனித தலங்கள்

அரச மரத்தடியில் விளக்கேற்றலாம்

மகாளய அமாவாசை தினத்ததில், பூமிக்கு வரும் நம் முன்னோர்கள் அரச மரத்தில் தங்குவதாக ஐதீகம். எனவே மகாளய அமாவாசை அன்று அரச மரத்தடியில் ஒரு விளக்கை ஏற்றி வைத்து வணங்கலாம்(How To Pray Pithru). இதன்மூலம் முன்னோர்கள் மகிழ்ச்சி அடைந்து, ஆசி வழங்குவார்கள் என்பது நம்பிக்கை

==========

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in