தமிழக தேர்தல் களம் :
MDMK Vaiko Election Campaign : 2026 சட்டமன்ற தேர்தல் படிப்படியாக நெருங்கி வரும் நிலையில், திமுக, அதிமுக மற்றும் பாமக உள்ளிட்ட கட்சிகள் தங்களது கட்சி பிரச்சாரத்தை தொடங்கி விட்டன. தேர்தல் சுற்றுப் பயணம் மூலம் பொதுமக்களை அக்கட்சியின் தலைவர்கள் சந்தித்து வருகின்றனர்.
தேர்தல் களத்தில் மதிமுக :
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுக தேர்தலை எதிர்கொள்ள ஆயத்தமாகி வருகிறது. கட்சியின் அங்கீகாரத்திற்காக சட்டமன்ற தேர்தலில் கூடுதல் இடங்களில் போட்டியிட வேண்டிய கட்டாயம் அந்தக் கட்சிக்கு உள்ளது. மாநிலங்களவை உறுப்பினராக இருந்த அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ(Vaiko), நேற்றுடன் அந்தப் பதவியில் இருந்து விடை பெற்றார்.
வைகோ தேர்தல் சுற்றுப்பயணம் :
இந்நிலையில், தமிழக தேர்தல் பிரசாரத்தில் சுறுசுறுப்புடன் களமிறங்குகிறார் வைகோ. இது தொடர்பாக மதிமுக சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் “தமிழகத்தின் எட்டு இடங்களில் நம் மாநில வாழ்வாதாரங்களைக் காக்க, ஜனநாயகத்தைப் பாதுகாக்க மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர் வைகோ பிரச்சாரக் கூட்டங்கள் ஏற்பாடு(Vaiko Campaign) செய்யப்பட்டுள்ளன.
தீவிர பரப்புரையில் வைகோ :
மதிமுகவினர், தமிழக உரிமைகளுக்காகப் போராடுகிறவர்கள், தமிழ்நாட்டின் மீது அடங்காப் பற்றுக் கொண்டவர்கள் பல்லாயிரக் கணக்கில் திரண்டிட கழக நிர்வாகிகள் ஏற்பாடுகளைச் செய்வார்கள். ஆகஸ்டு 9ம் தேதி தூத்துக்குடியில் சுற்றுப்பயணத்தை தொடங்கும் வைகோ, பல்வேறு தலைப்புகளில் மக்களிடையே உரையாற்றுகிறார். ஆகஸ்டு 19ம் தேதி சென்னை திருவான்மியூரில் அவர் பிரசாரத்தை நிறைவு செய்கிறார்.
மேலும் படிக்க : Vaiko: ”பழிச்சொல்லுக்கு ஆளாகி நிற்கிறேன்” : புலம்பித் தள்ளும் வைகோ
வைகோ சுற்றுப்பயண விவரம் :
ஆகஸ்டு 9 - தூத்துக்குடி, பொருள்: ஸ்டெர்லைட் வெளியேற்றம்
ஆகஸ்டு 10 - கடையநல்லூர், பொருள்: மதச்சார்பின்மையும் கூட்டாட்சியும்
ஆகஸ்டு 11 கம்பம் - பொருள்: முல்லைப் பெரியாறும்; நியூட்ரினோவும்
ஆகஸ்டு 12 இடம் - திண்டுக்கல், பொருள்: விவசாயிகள், மீனவர்கள் துயரம்
ஆகஸ்டு 13 இடம் - கும்பகோணம், பொருள்: மேகதாதுவும், மீத்தேனும்
ஆகஸ்டு 14 இடம் - நெய்வேலி, பொருள்: நெய்வேலி நிலக்கரி நிறுவனம்
ஆகஸ்டு 18 இடம் - திருப்பூர், பொருள்: இந்தி ஏகாதிபத்தியம்
ஆகஸ்டு 19 இடம் - திருவான்மியூர், பொருள்: சமூக நீதியும்; திராவிட இயக்கமும்
=====