Vaiko: ”பழிச்சொல்லுக்கு ஆளாகி நிற்கிறேன்” : புலம்பித் தள்ளும் வைகோ

MDMK Vaiko on Son Durai Vaiko : ”குடும்ப அரசியலை விமர்சித்து விட்டு வந்த நான், இப்போது வாரிசு அரசியல் என்ற பழி சொல்லிற்கு ஆளாகி நிற்கிறேன் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்து இருக்கிறார்.
MDMK General Secretary Vaiko Son Durai Vaiko
MDMK General Secretary Vaiko Son Durai Vaiko
2 min read

வைகோ - மல்லை சத்யா - துரை வைகோ :

MDMK Vaiko on Son Durai Vaiko : திமுகவை விட்டு வெளியேறி மதிமுகவை தொடங்கிய வைகோ, தமிழக அரசியலில் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருக்கிறார். வாரிசு அரசியல், குடும்ப அரசியலை எதிர்த்து களம் கண்ட அவர், தற்போது தனது மகன் துரை வைகோவை கட்சிக்குள் கொண்டு வந்ததன் மூலம், நெருக்கடிகளை சந்திக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளார். மதிமுக துணைப்பொதுச் செயலாளர் மல்லை சத்யா - துரை வைகோ இடையேயான மோதல், வைகோவின் அரசியல் களத்தில் சறுக்கலை ஏற்படுத்தி இருக்கிறது. மல்லை சத்யாவை துரோகி என வைகோ விமர்சிக்க, யார் துரோகி, உங்களுக்கு எதிரி துரை வைகோதான் என்று மல்லை சத்யா பதிலடி கொடுத்து மதிமுகவில் புகைச்சலை கிளப்பி விட்டு இருக்கிறார்.

மதிமுகவுக்கு அழிவே கிடையாது - வைகோ :

இந்தநிலையில், விழுப்புரத்தில் நடைபெற்ற மதிமுக மண்டல செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ(Vaiko Speech), தமிழகத்தின் முக்கிய அரசியல் கால கட்டங்களில் மதிமுக செத்துவிட்டதென ஊடகங்களில் விமர்சனங்கள் எழுந்து விவாதங்கள் நடக்கிறது. ஆனால், கட்சியின் லட்சக்கணக்கான தொண்டர்கள் அதனை பொய்யாக்கி, 31 ஆண்டுகளாக கட்சியை காத்து வருகின்றனர்.

துரோகங்கள் என்னை தொடருகின்றன :

நீண்டகாலமாகவே துரோகங்கள் என்னை தொடர்ந்து கொண்டுதான் வருகிறது. நான் மத்திய அமைச்சராக்கிய செஞ்சி ராமச்சந்திரன் உள்ளிட்ட பலரும் துரோகம் செய்து கட்சியில் இருந்து விலகினர்.

செஞ்சி ராமச்சந்திரன், எல்.கணேசன் போன்றோர் பல லட்சம் சன்மானம் பெற்றுக்கொண்டு, மதிமுகவினரை உடைத்து திமுகவில் சேர்க்க முயன்றனர்.

மல்லை சத்யா துரோகிதான் :

நான் சிறையில் வாடியதையும் விமர்சித்து, அவதுாறு பரப்பினார். இதுபோன்றவர்களுடன் தொடர்பு வைத்திருந்த மல்லை சத்யாவை(Mallai Sathya) துரோகி என்றுதான் சொல்ல வேண்டும். வெளிநாட்டில் இருந்துகொண்டு என்னை விமர்சித்தவர்களுடன் தொடர்பு வைத்து, அதனை மறுக்காமல் உள்ள ஒருவரைத்தான் துரோகி என்கிறேன். 3 ஆண்டுகளாக வெளிநாடுகளுக்கு செல்லும் அவர், அதுபற்றி என்னிடம் எந்த தகவலும் சொல்வது இல்லை. பல தீய சக்திகளின் பின்புலத்துடன், மதிமுகவை முடக்க சதித்திட்டம் தீட்டுவதும் எனக்குத் தெரியும். கட்சியிலிருந்து அவரை நீக்க சொன்னார்கள், ஆனால் அதை நான் செய்யவில்லை.

துரை வைகோ வர கட்சியினரே காரணம் :

எனது மகன் துரை வைகோ(Vaiko Son Durai Vaiko), கட்சிக்கு வரக்கூடாது என்று நான் கூறி வந்தேன். கட்சி நிர்வாகிகள் தான், துரை கட்சிக்கு வர வேண்டும் என கட்டாயப்படுத்தி, அதற்கான வாக்கெடுப்பும் நடத்தினர். இதற்காக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 106 பேரில், 104 பேர் ஆதரவாக வாக்களித்தனர். எனவேதான், துரை கட்சிக்கு வந்தார்.

’வாரிசு அரசியல்; எனக்கு பழிச்சொல் :

இதன் காரணமாகவே, வாரிசு அரசியல் என்ற பழிசொல்லிற்கு நான் ஆளாகி நிற்கிறேன். குடும்ப அரசியலை விமர்சித்துவிட்டு வந்த வைகோ, இப்போது தவிப்பில் இருக்கிறேன். திமுகவிற்காக 32 ஆண்டுகள் உழைத்தேன். கொலை பழிசுமத்தி துாக்கி எறியப்பட்டேன். புதிய கட்சி தொடங்க நான் விரும்பவில்லை. அதற்கான சூழல் அமைந்துவிட்டது.

பல துரோகங்களை கடந்து, மதிமுகவை காத்து வருகிறேன். தமிழக மக்களின் உரிமைக்காக தொடர்ந்து போராடி வருகிறேன்” இவ்வாறு வைகோ பேசினார்.

-----

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in