ஜிஎஸ்டி வரி விதிப்பில் மாற்றம் :
Next Gen GST Tax Reforms 2025 on Small Industries : சரக்கு மற்றும் சேவைகள் வரி ( GST ) கவுன்சிலின் 5-வது கூட்டத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன. இதையடுத்து 5%, 12%, 18%, 28% என நான்கு படிநிலைகளில் இருந்த ஜிஎஸ்டி வரிவிகிதங்கள், 5%, 18% என இரண்டு படிநிலைகளாக மாற்றப்பட்டுள்ளன. சொகுசுப் பொருட்களுக்கு 40% வரிவிதிப்பு இருக்கும். இந்த மாற்றங்கள் வரும் 22ம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன.
உணவுபதன தொழில் - கூடுதல் பலன் :
ஜிஎஸ்டி வரி விகித மாற்றங்களால் உணவுப்பதனத் தொழில்துறை பெரிய அளவில் பயனடைந்துள்ளது. பாதாம், பாஸ்தா, பழங்கள், காய்கறிகள், ஜாம், பழச்சாறுகள், சோயா பால் பானங்கள், பழக்கூழ் அடிப்படையிலான பானங்கள் போன்றவற்றுக்கான ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. கோக்கோ வெண்ணெய், கோக்கோ பவுடர், கோக்கோ சேர்த்து தயாரிக்கப்பட்ட சாக்லேட்டுகள், சூப் வகைகள், ஐஸ்கிரீம் போன்றவற்றுக்கான ஜிஎஸ்டி வரி 18 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டு இருக்கிறது.
மேலும் படிக்க : சுகாதாரம், காப்பீடு வரி சீர்திருத்தம்: மக்களுக்கு கிடைக்கும் நன்மை
சில்லரை விலை குறைவு, நுகர்வோருக்கு லாபம் :
இவ்வாறு வரி குறைக்கப்படுவதால், உற்பத்தித் துறை ஊக்கம் பெறும். இதன் காரணமாக இத்துறையில் முதலீடு உயர்ந்து, வேலைவாய்ப்பும் அதிகரிக்கும். விவசாயிகள் மற்றும் உணவுப்பதன தொழில் துறையினரின் வருவாய் அதிகரிக்கும். சில்லறை விற்பனை விலை குறைவதால், தேவை அதிகரிப்பதோடு நுகர்வும் அதிகரிக்கும். மத்திய அரசின் இந்த வரி குறைப்பு நடவடிக்கையை அனைத்து தரப்பினரும் வரவேற்று உள்ளனர்.