
இரண்டு அடுக்குகளில் ஜிஎஸ்டி வரி:
New Gen GST Reforms on Health Life Insurance: நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரி விதிப்பு என்பது நான்கு அடுக்குகளாக உள்ளது. இதை மாற்றியமைக்க தொடர்ந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வந்த நிலையில், மத்திய பாஜக அரசும் பரிலீசித்து வந்தது. இந்தநிலையில், சுதந்திர தினத்தன்று தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, தீபாவளிக்கு மக்களுக்கு மிகப்பெரிய பரிசு காத்திருப்பதாக தெரிவித்தார்.
மக்களுக்கு நன்மை பயக்கும் 0% வரி :
அந்தப் பரிசினை டெல்லியில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில்(GST Council Meeting 2025) மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, நான்கு அடுக்குகள் 2 அடுக்குகளாக குறைக்கப்பட்டுள்ளது. பல்வேறு பொருட்கள் அதாவது மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் பூஜ்யம் ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வரப்பட்டு இருக்கின்றன.
சுகாதாரத்துறை அடுக்கடுக்கான சலுகை :
அந்தவகையில் ஜிஎஸ்டி சீர்திருத்தம் காரணமாக சுகாதாரத்துறை அடையும் நன்மைகள், அதன்மூலம் மக்களுக்கு கிடைக்க போகும் நலன்கள் குறித்து பார்க்கலாம். "ஆரோக்கியமான இந்தியா" என்பது மருத்துவமனைகள், மருந்துகள் பற்றியது மட்டும் கிடையாது, எந்த குடும்பமும் நோயின் சுமையால் சரிந்து விடக்கூடாது என்பதை உறுதி செய்வதாகும். அதன் அடிப்படியில் தான் உலகின் மிகப்பெரிய சுகாதார உத்தரவாத திட்டமான ’ஆயுஷ்மான் பாரத்’ கொண்டு வரப்பட்டது. இது 12 கோடி குடும்பங்களுக்கு எந்த நோயும் நிதி ரீதியாக அவர்களை பாதிக்காது என்ற நம்பிக்கையை அளித்தது.
இதன் மூலம் பலரும், அறுவை சிகிச்சைக்காக வீட்டை விற்காமல், சிகிச்சை முடிந்து தங்கள் வீடுகளுக்கு மகிழ்ச்சியுடன் திரும்பினர். இதன் மூலம் அவர்களின் எதிர்கால கனவுகளுக்கு உறுதி அளிக்கப்பட்டது.
இன்று, சுகாதாரம் மற்றும் ஆயுள் காப்பீட்டில் பூஜ்ஜிய ஜிஎஸ்டி வரியுடன்(New Gen GST Rate on Health Insurance), விரிவடைந்துள்ளது.
சுகாதார காப்பீடு 0% வரி விதிப்பு :
உதாரணமாக ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ஒரு தந்தை தனது குடும்பத்தின் சுகாதார காப்பீட்டிற்காக ₹30,000 செலுத்தி வருகிறார் என்றால், அதற்கு அவர் ரூ.5,400 ரூபாயை வரியாக செலுத்த வேண்டும். இது பள்ளி கட்டணம், பெற்றோர் மருந்துகளுக்கு செலவழிக்க வேண்டிய பணம் இது. இந்த ஆண்டு முதல், ஜிஎஸ்டி சுமை நீங்கிவிட்டது. இனி அவர் வரி செலுத்த தேவையில்லை(New Gen GST on Insurance). சுகாதார செலவுகள் அதிகரித்து வரும் சூழலில் மத்திய அரசின் இந்த சலுகை, நடுத்த, கிராமப்புற குடும்பங்களுக்கு உதவிகரமாக இருக்கும்.
உயிர் காக்கும் மருந்துகளுக்கு வரி விலக்கு :
மருந்துகள் மற்றும் பரிசோதனைகளோடு மட்டும் இது நிற்கவில்லை. 33 உயிர்காக்கும் மருந்துகளுக்கும் இப்போது வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. நோயறிதல் கருவிகள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் GST 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக(Tax exemption for life-saving drugs) குறைக்கப்பட்டுள்ளது.
தீங்கு பயக்கும் பொருட்களுக்கு அதிக வரி :
புற்றுநோய் நோயாளி, பிரசவத்திற்கு முந்தைய பரிசோதனைகள் தேவைப்படும் தாய்க்கு, இதய நோயாளிக்கு குறைந்த விலையில் மருந்துகள், மருத்துவ சிகிச்சைகள் கிடைக்க இது வழி வகை செய்யும். அதேசமயம், உடல்நலனுக்கு நீங்கு விளைவிக்கும் பொருட்கள் மீது அதிக வரி விதிக்கப்பட்டு இருக்கிறது. குறிப்பாக சிகரெட், மது, குளிர் பானங்கள் மற்றும் பான் மசாலா மீது 40 சதவீதம் வரை வரி விதிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்தியா நோய்களுக்கு மானியம் வழங்காது, சுகாதாரத்திற்கு மட்டுமே மானியம் வழங்கும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
மக்களுக்கான பாதுகாப்பு வலை :
இது வெறும் சீர்திருத்தும் கிடையாது. பின்னப்பட்ட பாதுகாப்பு வலையாகும். மலிவு விலையில் மருந்துகளை வழங்கும் மையங்கள், .
கோடிக்கணக்கான ஏழைக் குடும்பங்களுக்கு 5 லட்சம் ரூபாய் வரை சுகாதார காப்பீட்டை வழங்கும் ஆயுஷ்மான் பாரத். வீட்டுவசதி, முத்ரா கடன்கள் மற்றும் உஜ்வாலா யோஜனா ஆகியவை மக்களின்ஓ ஆரோக்கியமான வாழ்க்கை நிலைமையை உயர்த்துகின்றன.
வறுமையில் இருந்து குடும்பங்கள் மீட்பு :
ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் காப்பீடு மற்றும் மருந்துகளின் விலையை குறைக்கும். பல ஆண்டுகளாக நோய்கள் இந்திய குடும்பங்களை வறுமையில் தள்ளின. மருத்துவமனைக்கு செல்வது, சிகிச்சை மேற்கொள்வது என்பது, நிலத்தை விற்பது, குழந்தைகளின் படிப்பை நிறுத்துவது, அதிக வட்டிக்கு கடன் வாங்குவது என்பதில் தான் போய் முடிந்து இருக்கிறது.
மக்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் :
ஆனால், இதை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு முற்றிலுமாக மாற்றி அமைத்து இருக்கிறது. இப்போது,
சுகாதார சேமிப்பு என்றால் குடும்பங்களை ஒன்றாக இணைப்பதாகும்.
மேலும் படிக்க : GST 2.O Reforms : 2 அடுக்குகளாக குறைப்பு: 22ம் தேதி முதல் அமல்
மருத்துவம் என்பது கண்ணியத்தை பாதுகாப்பதாகும். சுமையில்லாத காப்பீடு எதிர்கால பாதுகாப்பை வலுப்படுத்துகிறது.
ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம்(GST Reforms 2.0) மூலம் ஒவ்வொரு இந்தியருக்கு சொல்வது என்னவென்றால், ” நீங்கள் முக்கியம். உங்கள் உடல்நலம் முக்கியம். உங்கள் குடும்பத்தின் எதிர்காலம் முக்கியம்." இது ஆரோக்கியத்திற்கு கிடைக்கும் வெற்றியாகும். கண்ணியத்திற்கும், இந்தியாவுக்கும் கிடைத்த வெற்றியாகவே கருதப்படும் என்பதில் சந்தேகம் இல்லை.
=================