தனித்தனி பொதுக்குழு :
Ramadoss vs Anbumani Clash : அன்புமணி, ராமதாஸ் இருவருக்கும் மோதல் முற்றிய நிலையில் இருவரும் தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 9ம் தேதி சென்னையில் அன்புமணி தரப்பு பொதுக்குழு நடத்தினர். அதில் அன்புமணியின் தலைவர் பதவியை ஓராண்டு நீட்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு போட்டியாக ராம்தாஸ் தலைமையில் பாமக பொதுக்குழு நேற்று நடைபெற்றது. இந்த பொதுக்குழுவில் 36 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகள் :
8 பேர் அடங்கிய ஒழுங்கு நடவடிக்கைக் குழு தயாரித்த அறிக்கையை ஜி.கே. மணி வாசித்தார்.
* 28-12-24-ம் தேதி நடைபெற்ற சிறப்பு புத்தாண்டு பொதுக்குழுவில் ‘மைக்-கை’ தூக்கி வீசியது.
* பனையூரில் புதிய அலுவலகம் தொடங்கியது.
* கட்சியின் தலைமைக்கு கட்டுப்படாமல் பிளவுபடுத்தும் செயலில் ஈடுபட்டுள்ளது.
* சமூக ஊடகங்ளில் ராமதாஸ் உள்ளிட்டவர்களை அவதூறாக விமர்சிப்பது.
* தைலாபுரம் இல்லத்தில் ஒட்டு கேட்பு கருவி வைத்தது.
* அனுமதியின்றி பொதுக்குழு கூட்டத்தை நடத்தி ராமதாசின் புகைப்படத்தை வைத்து அவருக்கு நல்ல புத்தி கொடுங்கள் என வேண்டிக் கொண்டது.
* பணம் மற்றும் பதவி ஆசை காட்டி ராமதாசை சந்திக்க வருபவர்களை தடுத்து நிறுத்தியது.
* பசுமை தாயகம் அமைப்பை கைப்பற்றிக் கொண்டது, சென்னையில் இயங்கி வந்த தலைமை அலுவலகத்தை இடம் மாற்றம் செய்தது.
* ராமதாசிடம் 40 தடவை பேசியதாக பொதுவெளியில் பொய் பேசியது
என அன்புமணி மீது 16 வகையான குற்றச்சாட்டுகளை எடுத்துரைத்து, நடவடிக்கை எடுக்க ராமதாசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
மேலும் படிக்க : Anbumani: ’தூய்மைப் பணியாளர்களை சுரண்ட வேண்டாம்’: அன்புமணி விளாசல்
அன்புமணிக்கு நோட்டீஸ் :
இதையடுத்து, அன்புமணி விளக்கம் அளிக்க வேண்டும் என்று அஞ்சல் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருக்கிறது. கட்சியை தனது பிடிக்கும் வைக்க சாட்டையை சுழற்ற தொடங்கி விட்ட ராமதாஸ், தேவைப்பட்டால் பாமகவில் இருந்து அன்புமணியை நீக்கவும் தயங்க மாட்டார் என்கின்றனர், அவரது நெருங்கிய ஆதாரவாளர்கள்.
====