Ramadoss once again given important responsibility in PMK to G.K. Mani Son  
தமிழ்நாடு

ஜி.கே. மணி மகனுக்கு பாமகவில் பொறுப்பு: அன்புமணியை சீண்டும் ராமதாஸ்

Ramadoss vs Anbumani Clash Update : பாமக கௌரவத் தலைவர் ஜி.கே. மணியின் மகனுக்கு பாமகவில் மீண்டும் முக்கிய பொறுப்பு வழங்கி இருக்கிறார் டாக்டர் ராமதாஸ்.

Kannan

ராமதாஸ் - அன்புமணி மோதல் :

Ramadoss vs Anbumani Clash Update : பாட்டாளி மக்கள் கட்சியில் நிறுவனர் ராமதாசுக்கும், தலைவர் அன்புமணிக்கும் இடையேயான மோதல் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வலுத்துக் கொண்டே வருகிறது. நிர்வாகிகள் நியமனம், நீக்கம் தொடங்கி, தேர்தல் ஆணையம் வரை இருவரும் மல்லுக் கட்டுகிறார்கள். சட்டமன்றத்தில் பாமக தலைவர் யார் என்பதில், இருவரும் பிடிவாதமாக இருக்கிறார்கள். கட்சியின் சின்னமான மாம்பழம் யாருக்கு என்ற சஸ்பென்சை தேர்தல் ஆணையம் தான் உடைக்க வேண்டும்.

ஜி.கே. மணி மகனுக்கு பொறுப்பு :

பாமகவின் கௌரவத் தலைவரான ஜி.கே. மணியின்(GK Mani Son) மகனுக்கு கட்சியின் முக்கிய பொறுப்பை வழங்கி இருக்கிறார் நிறுவனர் ராமதாஸ். அதன்படி, தமிழ்க்குமரன் மீண்டும் பாமகவின் இளைஞரணி தலைவராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். தைலாபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ்(Ramadoss) இதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.

மீண்டும் இளைஞரணி தலைவர் பதவி :

முன்னதாக பாமக இளைஞரணி தலைவராக இருந்த அன்புமணிக்கு பதிலாக தமிழ்க்குமரனை இளைஞரணி தலைவராக(Tamil Kumaran PMK) அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் நியமித்திருந்தார். பின்னர் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து அந்தப் பதவி ராமதாஸின் மகள் வழி பேரன் முகுந்தனுக்கு வழங்கப்பட்டது.

அன்புமணியை சீண்டும் ராமதாஸ் :

இதன் காரணமாகவே ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே ஏற்பட்ட மோதலால் பாமக இரண்டாக பிளவுபட்டு நிற்கிறது. இந்தச் சூழலில் தமிழ்க்குமரனுக்கு மீண்டும் கட்சியில் பதவி கொடுத்து, அன்புமணியை சீண்டிப் பார்த்து இருக்கிறார் ராமதாஸ்.

மேலும் படிக்க : PMK Ramadoss vs Anbumani : யார் கை ஓங்கும்? சோர்வடையும் தொண்டர்கள்

இதற்கு அன்புமணி தரப்பு என்ன பதிலடி கொடுக்கு எனத் தெரியவில்லை. தமிழ்க்குமரனிடம் நியமன உத்தரவை ராமதாசின் மூத்த மகள் ஸ்ரீகாந்தி வழங்கினார்.

=======