PMK Ramadoss vs Anbumani : யார் கை ஓங்கும்? சோர்வடையும் தொண்டர்கள்

PMK Ramadoss vs Anbumani Clash Update : பாமகவில் இருந்து அன்புமணி நீக்கப்பட்ட நிலையில், அடுத்து என்ன நடக்கும்? யார் கைக்கு அதிகாரம் போகும்? என்ற உச்சக்கட்ட குழப்பத்துடன் தொண்டர்கள் நிற்கின்றனர்.
PMK Ramadoss vs Anbumani Clash Update in Tamil
PMK Ramadoss vs Anbumani Clash Update in Tamil
2 min read

PMK : பாட்டாளி மக்கள் கட்சி :

PMK Ramadoss vs Anbumani Clash Update : பாட்டாளி மக்கள் கட்சி, ராமதாசால் தொடங்கப்பட்டு வளர்ந்து நிற்கும் அரசியல் இயக்கம்.வட தமிழகத்தில் அதிக அளவில் வசிக்கும் சமூகமான வன்னியர் சாதியினருக்கு அரசியல் பிரதிநிதித்துவம் வழங்குவதற்காக 1989ம் ஆண்டு டாக்டர் ராமதாசால் பாமக தொடங்கப்பட்டது(PMK Party Origin). அவரது மகன் அன்புமணியும் கட்சிக்குள் வந்து, தலைவராக இருக்கிறார்.

அதிகார மோதலில் தந்தை - மகன் :

பேரனை கட்சி பொறுப்புக்குள் கொண்ட வர ராமதாஸ் எடுத்த முயற்சிக்கு அன்புமணி பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவித்ததால், ஏற்பட்ட மோதல் இன்று கட்சி இரண்டாக உடையும் நிலைக்கு கொண்டு வந்து விட்டது. நிர்வாகிகள் நீக்கம், நியமனம், பொதுக்குழு என இரண்டு பேரும் வரிந்து கட்டினர். ஒரு கட்டத்தில் அன்புமணி மீது பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்த ராமதாஸ் அவருக்கு நோட்டீசும் அனுப்பினார்.

பாமகவில் இருந்து அன்புமணி நீக்கம் :

அதற்கு அன்புமணி பதிலளிக்காத நிலையில், அவரை பாமக செயல் தலைவர் பதவியில் இருந்தும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியிருக்கிறார் ராமதாஸ். அன்புமணி(Anbumani Removed From PMK) அரசியலுக்கு தகுதியற்றவர். நான் 46 ஆண்டுகாலம் ஓடி ஓடி உழைத்து, 96 ஆயிரம் கிராமங்களுக்கு நடந்து சென்று உருவாக்கிய கட்சி. எனவே, அன்புமணி விரும்பினார் தனிக்கட்சி தொடங்கலாம். அன்புமணி வெளியேற்றம் பாமகவிற்கு பின்னடைவு கிடையாது. அன்புமணி கட்சி தொடங்கினாலும் அது வளராது, இதை அவரோடு இருப்பவர்கள் உணர வேண்டும், இவ்வாறு திட்டவட்டமாக முடிவு எடுத்து இருக்கிறார் ராமதாஸ்.

இரண்டாக உடைந்த பாமக :

இதன் காரணமாக பாமக இரண்டாக உடைந்து இருக்கிறது. பலநாட்கள் நீடித்து வந்த இழுபறி முடிவுக்கு வந்து இருந்தாலும், இது தீர்வு கிடையாது(PMK Rift). இனிதான் பிரச்சினைகள் ஆரம்பிக்க போகின்றன. பாமக நிர்வாகிகள், தொண்டர்கள் ஏற்கனவே நம்பிக்கையற்ற நிலையில் இருக்கின்றனர். அவர்களை இது மேலும் சோர்வுக்குள்ளாக்கும். தேர்தல் 8 மாதங்களே உள்ள நிலையில், கட்சி எழுச்சி பெறுமா? வெற்றிக் கனியை பறிக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

யாருக்கு அதிகாரம், தேர்தல் ஆணையம் கையில் :

பெரும்பாலான கட்சி நிர்வாகிகள் அன்புமணி பக்கம் நின்றாலும், தேர்தல் ஆணைய பதிவுகளின்படி அன்புமணிக்கு பாமகவில் பொறுப்பும், அதிகாரமும் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் அவை பொய்யானவை என்று அடித்து சொல்கிறார் ராமதாஸ். அது உண்மையானால், அன்புமணிக்கு பெரும் சறுக்கலாக முடியும். கூட்டணி அமைப்பதில் பெரும் சிக்கல் ஏற்படும்(Anbumani Ramadoss Issue). ஒன்று அன்புமணி தனிக்கட்சி தொடங்க வேண்டும், அல்லது பாஜகவில் இணைய வேண்டும்.

மேலும் படிக்க : PMK: அன்புமணியை நீக்கும் அதிகாரம் ராமதாசுக்கு இல்லை : பாலு அதிரடி

பெரும் குழப்பத்தில் பாமக தொண்டர்கள் :

அதேசமயம் ராமதாஸ் கைக்கு அதிகாரம் சென்றால், அவர் எந்த கூட்டணியை தேர்வு செய்வார் என்பது தற்போது வரை தெரியவில்லை. பாமக விவகாரம் தேர்தல் ஆணையம் கைக்கு சென்றால், பின்னர் நீதிமன்றத்தின் கதவு தட்டப்படும். உடனடியாக தீர்வு கிடைக்க வாய்ப்பில்லை. கட்சியின் மாம்பழ சின்னமும் முடங்கும் ஆபத்து இருக்கிறது. இது தந்தை மகன் இருவருக்கும் சிக்கல்தான். பேச்சுவார்த்தை மூலம் சுமூக முடிவு எட்டப்பட்டால் மட்டுமே பாமக எழுச்சி பெறும் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

==============

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in