PMK Leader Ramadoss Anbumani Clash Over Party Flag https://x.com/draramadoss
தமிழ்நாடு

பாமக கொடியை ’பிடிக்காதே’ : அன்புமணியை நெருக்கும் ராமதாஸ்

PMK Leader Ramadoss Anbumani Clash : உரிமை மீட்பு பயணத்தில் பாமக கொடியை அன்புமணி பயன்படுத்த கூடாது, நிர்வாகிகளை சந்திக்க கூடாது என்று ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

Kannan

என்ன ஆகும் பாட்டாளி மக்கள் கட்சி :

PMK Leader Ramadoss Anbumani Clash : பாட்டாளி மக்கள் கட்சியில் தலைவர் ராமதாஸ், செயல் தலைவர் அன்புமணி இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டி இருக்கிறது. தந்தை - மகன் இடையேயான இந்த உரசல் விரைவில் சுமூகமாக முடியும் என்று கட்சி நிர்வாகிகளின் எதிர்பார்ப்பு, பொய்த்து போய் விடுமோ என்ற நிலை உருவாகி இருக்கிறது. பாமக இரண்டாக உடையும் ஆபத்து இருப்பதாகவும் அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

அன்புமணியின் ’உரிமை மீட்பு பயணம்’ :

கட்சியை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் முயற்சியில் முனைப்பு காட்டி வரும் அன்புமணி நாளை முதல் ’உரிமை மீட்பு பயணம்’(Urimai Meetpu Payanam) மேற்கொள்கிறார். கட்சி நிர்வாகிகளையும், தொண்டர்களை அவர் சந்திக்க உள்ளார். பாமக தலைவர் ராமதாசின் பிறந்த நாளான நாளை தனது சுற்றுப் பயணத்தை அன்புமணி தொடங்குகிறார்.

100 நாட்கள் சுற்றுப் பயணம் :

சென்னையை அடுத்த திருப்போரூரில் புதிய பயணத்தை தொடங்கி கட்சித் தொண்டர்களை சந்திக்கவுள்ளார். "பாமக தலைவர் அன்புமணியின் உரிமை மீட்க, தலைமுறை காக்க நடைப்பயணம்"(Anbumani Road Show) என்ற பெயரில் தொடங்கப்படும் இந்தப் பயணம், நாளை மாலை சென்னையை அடுத்த திருப்போரூரில் ஆரம்பமாகிறது. தமிழகத்தின் முக்கியத் தொகுதிகள் வழியாக 100 நாட்கள் நீண்ட தூரம் பயணிக்கும் இந்தப் பயணம், வரும் நவம்பர் 1ஆம் தேதி தருமபுரியில் நிறைவடையவுள்ளது. இந்தப் பயணத்திற்கான இலச்சினையும் வெளியிடப்பட்டு, கட்சித் தொண்டர்கள் இடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க : Ramadoss : அன்புமணிக்கு அதிகாரம் இல்லை : ராமதாஸ் திட்டவட்டம்

ராமதாஸ் நேரடியாக எதிர்ப்பு :

அன்புமணியின் பயணத்திற்கு டாக்டர் ராமதாஸ் நேரடியாக எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார். பாமக கட்சிக் கொடியை அன்புமணி(Anbumani PMK Flag) பயன்படுத்தக் கூடாது என்றும் அவர் எச்சரித்துள்ளார். மேலும் அவர் சார்பில் தமிழக காவல்துறைத் தலைவர் (டிஜிபி) அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டு இருக்கிறது.

டிஜிபியிடம் ராமதாஸ் புகார் மனு :

கட்சியின் நிறுவனர் அனுமதி இல்லாமல், கட்சி கொடி, மற்றும் நிர்வாகிகளைச் சந்திக்கும் பிரச்சாரப் பயணத்தை அன்புமணி ராமதாஸ்(Anbumani Ramadoss Campaign) மேற்கொள்வதாகக் குற்றம்சாட்டியுள்ள ராமதாஸ், இந்தப் பயணத்தைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

====