Ramadoss : அன்புமணிக்கு அதிகாரம் இல்லை : ராமதாஸ் திட்டவட்டம்

Ramadoss and Anbumani Ramadoss Fight: எம்எல்ஏ. அருளை கட்சியில் இருந்து நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு கிடையாது என்று, பாமக தலைவர் ராமதாஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
Ramadoss and Anbumani Ramadoss Fight
Ramadoss and Anbumani Ramadoss Fight
1 min read

பாமகவில் நீடிக்கும் குழப்பம் :

Ramadoss and Anbumani Ramadoss Fight: பாட்டாளி மக்கள் கட்சியில் ராமதாஸ், அன்புமணி இடையேயான மோதல் முடிவு வருவதாக தெரியவில்லை. நிர்வாகிகளை நீக்குவது, நியமிப்பது என இருவரும் மாறிமாறி செயலாற்றி வருவது கட்சியில் பெரும் குழப்பத்திற்கு வித்திட்டுள்ளது.

சட்டமன்ற தேர்தலுக்கு 9 மாதங்கள் இருக்கும் நிலையில், பாமக யாருடன் கூட்டணி வைக்கும்? கட்சியின் யாருக்கு அதிகாரம் ? யாரை ஆதரித்து போவது? என்பதில் தொண்டர்கள் இடையே மனக்கலக்கம் ஏற்பட்டு இருக்கிறது.

எம்எல்ஏ அருள் நீக்கம் :

இந்தநிலையில், பாமக கொறடாவான எம்எல்ஏ அருள்(Arul), ராமதாஸ் பக்கம் நிற்கிறார். அவர் அன்புமணிக்கு அட்வைஸ் செய்த நிலையில், கட்சியில் இருந்து அவரை நீக்குவதாக அன்புமணி அறிவித்தார்.

இதுபற்றி, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ராமதாஸ், எம்எல்ஏ. அருளை கட்சியில் இருந்து நீக்க அன்புமணிக்கு அதிகாரம் இல்லை எனக் கூறினார்.

நீக்கும் அதிகாரம் யாருக்கு? :

பாமகவில் நிர்வாகிகளை நீக்க தனக்கு மட்டுமே அதிகாரம் இருப்பதாக தெரிவித்த அவர், கட்சியின் கொறடாவாக அருள் இருப்பதை சுட்டிக் காட்டினார்.

கட்சியின் கௌரவத் தலைவர் ஜி.கே.மணி மூலம் கடிதம் கொடுத்த பிறகுதான் ஒருவரை நீக்க முடியும். எனது மனம் வேதனைப்படும் அளவுக்கு செய்திகள் வருகின்றன. எல்லாவற்றையும் புறந்தள்ளிவிட்டு கட்சியை நடத்தி வருவதாக ராமதாஸ்(Ramadoss) தெரிவித்தார்.

ஒருநாள் நீக்கும் மறுநாள் அதே நிர்வாகி தொடர்வது என்று ராமதாஸ், அன்புமணி ஆடும் கண்ணாமூச்சு ஆட்டம், பாமக தொண்டர்களை வேதனையில் ஆழ்த்தி இருக்கிறது.

====

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in