Pongal 2027 Train Ticket Booking Dates Announcement source: ai generated
தமிழ்நாடு

பொங்கல் பண்டிகை ரயில் டிக்கெட் முன்பதிவு : நவம்பர் 13 முதல் தொடக்கம்!

2027 பொங்கல் பண்டிகைக்கான சிறப்பு ரயில் டிக்கெட் முன்பதிவு நவம்பர் 13-ஆம் தேதி முதல் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Kavitha prasanna

It has been announced that ticket bookings for special trains for the 2027 Pongal festival will begin on November 13th.

ரயில் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்

தீபாவளிப் பண்டிகை முடிந்து சொந்த ஊர்களிலிருந்து திரும்பிய பயணிகளுக்கு அடுத்த கொண்டாட்டமாக பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு நவம்பர் 13-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்கப்பட உள்ளது. நீண்ட தூரப் பயணத்திற்கு 60 நாட்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்யும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது.

பண்டிகை நாட்கள் மற்றும் முன்பதிவு அட்டவணை

2027 ஜனவரி 14-ஆம் தேதி போகிப் பண்டிகையும், ஜனவரி 15-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) பொங்கல் பண்டிகையும், ஜனவரி 17-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காணும் பொங்கலும் கொண்டாடப்படவுள்ளது.

பயணத் தேதி மற்றும் முன்பதிவு செய்யும் நாட்கள்:

  1. ஜனவரி 13 (புதன்) பயணம் செய்ய: நவம்பர் 14 (சனிக்கிழமை) முன்பதிவு செய்ய வேண்டும்.

  2. ஜனவரி 14 (வியாழன்) பயணம் செய்ய: நவம்பர் 15 (ஞாயிற்றுக்கிழமை) முன்பதிவு செய்ய வேண்டும்.

  3. ஜனவரி 18 (ஞாயிறு) ஊர் திரும்ப: நவம்பர் 19-ஆம் தேதி முன்பதிவு செய்ய வேண்டும்.

  4. ஜனவரி 19 (திங்கள்) ஊர் திரும்ப: நவம்பர் 20-ஆம் தேதி முன்பதிவு செய்ய வேண்டும்.

முன்பதிவு செய்யும் முறைகள்

ஐஆர்சிடிசி (IRCTC) இணையதளம், கைபேசி செயலிகள் (Apps) வழியாகவோ அல்லது நேரடியாக ரயில்வே டிக்கெட் கவுண்டர்களிலோ பயணிகள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிங்க: நீர்நிலைகள் புனரமைப்புக்கு இணையவழியில் NOC : ‘ஏரி’ இணையதளத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்!

=============