Today Gold Rate in Chennai (7th October 2025) 
தமிழ்நாடு

90,000-ஐ தொடும் தங்கம் விலை : வெள்ளி விலையும் புதிய உச்சம்

Today Gold Rate in Chennai (7th October 2025) : தங்கம் விலை ஒரு சவரன் 90 ஆயிரத்தை நெருங்கியுள்ள நிலையில், வெள்ளி விலையும் புதிய உச்சம் தொட்டு இருக்கிறது.

Kannan

தினமும் உச்சம் தொடும் தங்கம் :

Today Gold Rate in Chennai (7th October 2025) : சர்வதேச நிலவரங்களால், கடந்த மாதம் முதல் இந்தியாவில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை, 22 காரட் தங்கம் கிராம் 10,950 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 87,600 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராம், 165 ரூபாய்க்கு விற்பனையானது.

நேற்று காலை, தங்கம் விலை கிராமுக்கு 110 ரூபாய் உயர்ந்து, எப்போதும் இல்லாத வகையில் 11,060 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு 880 ரூபாய் அதிகரித்து, 88,480 ரூபாய் என்ற உச்சத்தை எட்டியது. நேற்று மாலை, தங்கம் விலை கிராமுக்கு மீண்டும் 65 ரூபாய் அதிகரித்து, 11,125 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 520 ரூபாய் உயர்ந்து, 89,000 ரூபாய் என்ற புதிய உச்சத்தை எட்டியது.

90,000ஐ நெருங்கும் தங்கம்

இந்நிலையில், இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.600 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.89,600க்கு விற்பனை செய்யப்படுகிறது(Gold Price Today). கிராமுக்கு ரூ.75 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11,200க்கு விற்பனை ஆகிறது.

9 மாதங்களில் ரூ.32,400 உயர்வு

இந்த ஆண்டு ஜனவரி 1ம் தேதி தங்கம் கிராம் 7,150 ரூபாய்க்கும், சவரன் 57,200 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. கடந்த ஒன்பது மாதங்களில் மட்டும் தங்கம் விலை கிராமுக்கு 4,050 ரூபாயும், சவரனுக்கு 32,400 ரூபாயும் அதிகரித்துள்ளது. வரலாறு காணாத வகையில் புதிய உச்சம் தொட்டு வருவது நகைப்பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

24 காரட் தங்கம் பவுனுக்கு ரூ.648 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.97,744க்கும், 18 காரட் தங்கம் பவுனுக்கு ரூ.520 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.74,200க்கும் விற்பனை ஆகிறது

புதிய உச்சத்தில் வெள்ளி

தங்கத்திற்கு போட்டியாக வெள்ளி விலையும் நாள்தோறும் உயர்ந்து வருகிறது. கடந்த 4ம் தேதி வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 அதிகரித்து ஒரு கிராம் ரூ.165க்கும், கிலோவுக்கு 3 ஆயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து 65 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையானது. நேற்று காலை வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ரூ.166க்கும், கிலோவுக்கு ஆயிரம் உயர்ந்து, பார் வெள்ளி ரூ.1 லட்சத்து 66 ஆயிரத்துக்கும் விற்பனையானது.

மேலும் படிக்க : Gold Rate Today: உச்சம் தொடும் தங்கம் விலை - அதிர்ச்சியில் மக்கள்!

நேற்று மாலை வெள்ளி விலையும் உயர்ந்தது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 அதிகரித்து ஒரு கிராம்(Silver Rate Today) ரூ.167க்கும், கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் அதிகரித்து, பார் வெள்ளி 1 லட்சத்து 67 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையானது.

===============