Sanitary Workers Death Continues in Tamil Nadu 
தமிழ்நாடு

துப்புரவு தொழிலாளர் மரணங்கள் : உதட்டளவில் சமூகநீதி, செயலற்ற அரசு

Sanitary Workers Death in Tamil Nadu : துப்புரவு தொழிலாளர்களின் மரணங்கள் தொடர் கதையாகவே நீண்டு வருகிறது. சமூக நீதி குறித்து மூச்சுக்கு மூச்சு பேசும் திமுக அரசு மனித உயிர்களுக்கு மதிப்பளிப்பதில்லை.

Kannan

துப்புரவு தொழிலாளர்கள் மரணம்

Sanitary Workers Death Continues in Tamil Nadu : சாக்கடைகளை தூய்மைப்படுத்தும் பணியில் பணியாளர்களை ஈடுபடுவது, விஷவாயு தாக்கி அவர்களில் பலர் மரணம் அடைவது தமிழகத்தில் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. 2021 முதல் 2023 க்கு இடையில் மட்டும், சுமார் ஒன்றரை ஆண்டுகளில், தமிழ்நாட்டில் 43 மரணங்கள் நிகழ்ந்தன, ஆனால் அவற்றில் 25 மட்டுமே பதிவாகியுள்ளன. இது தொடர்பான வழக்குகளில் கொடுமை என்னவென்றால், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு அரசிடம் இருந்து நிதி நிவாரணமோ அல்லது ஆதரவோ கிடைப்பதில்லை என்பது தான்.

அப்பட்டமான சட்ட மீறல் :

திருச்சியின் திருவெறும்பூர் பகுதியில் இரண்டு துப்புரவுத் தொழிலாளர்கள்(Sanitation Workers Death) நிலத்தடி சாக்கடையில் நச்சு வாயுவை சுவாசித்து மரணத்தை தழுவினர். இதற்கு முக்கிய காரணம் சரியான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் அவர்கள் அனுப்பப்பட்டது தான், இது கையால் துப்புரவு செய்தலை தடைச் சட்டத்தை அப்பட்டமாக மீறியதற்கான உதாரணம்.

3 ஆண்டுகளில் 50 பேர் மரணம் :

கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் இதே போன்று சுமார் 50 துப்புரவுத் தொழிலாளர்களை தமிழகம் இழந்துள்ளது(Sanitary Workers Death). இவை விபத்துகள் கிடையாது. தவிர்க்க வேண்டிய, தவிர்த்து இருக்க வேண்டிய மரணங்கள், ஆனால், அலட்சியம், அக்கறையின்மைக்கு கொடுக்கப்பட்ட விலை தான் இத்தகைய உயிரிழப்புகள்.

சிலைகள் வைப்பதில் அரசுக்கு ஆர்வம் :

தலைவர்களின் சிலைகளை வைத்து அழகுபார்க்கும் போது சமூக நீதி பற்றி பேசும் திமுக அரசு, மனிதர்களை சாக்கடைகளில் இறக்க மட்டும் எப்படி அனுமதிக்கிறது? ஒவ்வொரு உரையிலும் "சமூக நீதி" என்று பேசும் திமுக அரசு, சுகாதாரத் தொழிலாளர்களைப் பாதுகாக்கத் தொடர்ந்து தவறிவிட்டது என்பது தான் உண்மை. திருவெறும்பூர் மரணங்கள், நிர்வாகத்தை உதட்டளவில் மட்டுமே திமுக அரசு பேசுவதை உணர்த்து இருக்கிறது.

தொழிலாளர்கள் மீது அக்கறையில்லை :

அரசின் முக்கிய குறைபாடு என்னவென்றால், துப்புரவு தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கத் தவறியது. கழிவுநீரை சுத்தம் செய்யும் பணியை இயந்திர மயமாக்க மறுப்பது. முறையான, நிரந்தரமான மாற்றத்தை பற்றி யோசிக்காமல், அற்பமான இழப்பீடு வழங்குவதன் மூலம் பிரச்சினையை சரி செய்ய முடியாது.

மத்திய அரசு அக்கறை, திமுக அரசு மெத்தனம் :

சாக்கடை சுத்தம் செய்யும் பணியை இயந்திரங்கள் மூலம் செயல்படுத்தி, தொழிலாளர்களை பாதுகாக்க மத்திய அரசு நமஸ்தே திட்டத்தை செயல்பட்டி வருகிறது. ஆனால், தமிழகமோ, மனிதர்களை மரணக் குழிகளுக்குள் அனுப்புகிறது. "பிரதமர் மோடியின் கீழ் தேசிய மாதிரிக்கும் முதல்வர் ஸ்டாலினின் திராவிட மாதிரிக்கும் உள்ள வித்தியாசம் இதுதான்.

சாக்கடையை சுத்தம் செய்யும் ரோபோக்கள் :

சென்னை ஐஐடி மெட்ராஸ் மாணவர்கள் ஹோமோசெப் மற்றும் சிப்பாய் போன்ற ரோபோக்களை உருவாக்கியுள்ளனர். இவை மூலம் கைகள் மூலம் துப்புரவு முறையை முழுமையாக ஒழித்து விடலாம். இந்த ரோபோக்கள் சோதிக்கப்பட்டவை, விலை மலிவானவை, பயன்படுத்தவும் காத்திருக்கின்றன. ஆனால், திமுக அரசு இவற்றை ஏற்க மறுக்கிறது.

தொழிலாளர் மரணம் - சட்டத்தின் தோல்வி :

நிலத்தடியில் மனிதன் மூச்சுத் திணறி மரணிக்கும் போது, வெண்கலச் சிலைகள் மட்டும் முதலீடு செய்வது எந்த வகையில் நியாயம்?. இது சட்டத்தின் தோல்வி. அரசின் செயலற்ற தன்மையை காட்டுகிறது.

2023ம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், சாக்கடை இறப்புகளை தடுக்க தவறிய அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

திமுக அரசின் நடவடிக்கை பூஜ்யம் :

ஆனால், நடவடிக்கை பூஜ்யமாக இருப்பதே, திருவெறும்பூர் போன்ற சம்பவங்கள் எடுத்துக் காட்டுகின்றன(Thiruverumbur Sanitary Worker Death). மனிதர்களை சாக்கடையில் இறங்கி பணி செய்ய அனுமதிப்பது சட்ட விரோதம். ஆனால், இந்த கொடுமை தொடர்கிறது. இதற்கு பொறுப்பானவர்கள் மௌனமாக இருப்பதால், மரணங்கள் தொடர்கின்றன.

கடும் நடவடிக்கையே தீர்வு :

இதற்கு தீர்வுதான் என்ன? உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாயை உடனடி இழப்பீடாக வழங்க வேண்டும். பாதுகாப்பு விதிமுறைகளை மீறிய அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அனைத்து நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் துப்புரவு பணிகளை முழுமையாக இயந்தர மயமாக்கல் செய்ய வேண்டும் . உண்மையான தோல்வியை ஒப்புக் கொண்டு முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும்.

மேலும் படிக்க : பணி நிரந்தரம் செய்க! : மதுரையிலும் தூய்மை பணியாளர்கள் போராட்டம்

இனி தமிழகத்தில் துப்புரவு தொழிலாளர்கள் உயிரிழப்பதை தடுக்க வேண்டும் என்றால், முதலில் சிலைகள் வைப்பதை நிறுத்தி, உயிர்களை காப்பாற்ற முயற்சியுங்கள். ஏனென்றால், திமுக அரசின் செயலற்றதன்மை அப்பாவி உயிர்களை பலி வாங்குவதோடு, அவர்களின் குடும்பத்தையும் நிர்கதியாக்குகிறது.

================