
தூய்மை பணியாளர்கள் போராட்டம் :
Madurai Corporation Sanitary Workers Protest : சென்னையில் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ராயபுரம், திருவிக நகர் மண்டலங்களில் தூய்மை பணிகளை தனியாருக்கு கொடுப்பதை எதிர்த்து இவர்கள் போர்க்கொடி தூக்கினர். 13 நாட்களாக போராட்டம் நீடிக்க, நீதிமன்ற உத்தரவுப்படி அவர்களை அகற்றி, போராட்டத்தை முடித்தது திமுக அரசு. இந்த பிரச்சினையை தமிழக அரசு கையாண்ட விதம் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியிருந்தது.
மதுரையில் தூய்மை பணியாளர்கள் போராட்டம் :
இந்நிலையில் மதுரையில் தூய்மை பணியாளர்களின் போராட்டம்(Sanitary Workers Protest in Madurai) தொடங்கியிருக்கிறது. மதுரை மாநகராட்சி மொத்தம் 5 மண்டலங்களையும் 100 வார்டுகளையும் உள்ளடக்கி இருக்கிறது. 500க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் இரவு பகலாக வேலை பார்த்து மாநகரை தூய்மையாக வைத்திருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு போதிய பலன்கள் கிடைப்பதில்லை என்று கூறப்படுகிறது.
தூய்மை பணியாளர்களின் கோரிக்கை :
எனவே, 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் தங்களை நிரந்தர பணியாளராக மாற்றவும் தூய்மை பணியாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இவர்களின் கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டு வருவதால், தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தனியார் மயத்திற்கு கடும் எதிர்ப்பு :
அவர்களின் மிக முக்கிய கோரிக்கை தனியார் மயத்தை கைவிட வேண்டும் என்பதாகும் . மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி பணிகளில்(Madurai Corporation) தனியார் மயத்தை புகுத்தும் அரசாணை 152 மற்றும் 139-ஐ ரத்து செய்ய வேண்டும். குறைந்த பட்ச ஊதிய அரசாணையின்படி மாதச் சம்பளமாக 26,000 ரூபாய் வழங்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.
மேலும் படிக்க : Chennai Protest : சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்
தூய்மை பணிகள், ஸ்தம்பிக்கும் மதுரை :
இதற்கான நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், போராட்டத்தில் தூய்மை பணியாளர்கள் குதித்துள்ளனர். வரும் நாட்களில் இது தீவிரம் அடைந்தால், மதுரையில் தூய்மை பணிகள்(Sanitation Workers) ஸ்தம்பிக்கும் அபாயமும் உள்ளது.
=================