சீமான் மீது நடிகை விஜயலட்சுமி புகார்
Seeman Vijayalakshmi Case Update in Tamil : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி விட்டதாக நடிகை விஜயலட்சுமி 2011ம் ஆண்டு காவல்துறையில் புகார் அளித்தார். இதையடுத்து, சீமானுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் சீமான் மனு தாக்கல்(Seeman Case) செய்தார். சீமான் மீதான புகாரை விசாரித்த 12 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
உச்ச நீதிமன்றத்தில் சீமான் மேல்முறையீடு
இந்த உத்தரவை எதிர்த்து சீமான் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இரு தரப்பும் பேசி முடிவுக்கு வருமாறு கடந்த மார்ச் மாதம் நீதிமன்றம் அறிவுறுத்தியது. அடுத்த விசாரணை நடக்கும் வரை, சீமானுக்கு எதிரான வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடையும் விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை
சீமான் மீதான பாலியல் புகார் வழக்கில் சமரசம் வேண்டாம், நீதி தான் வேண்டுமென விஜயலட்சுமி தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, ஆர்.மகாதேவன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
24ம் தேதிக்குள் மன்னிப்பு கேட்க கெடு
அப்போது, நீதிபதிகள், வரும் 24ம் தேதிக்குள் விஜயலட்சுமியிடன் மன்னிப்பு கோர வேண்டும் என்று தெரிவித்தனர். மன்னிப்பு கோரத் தவறினால், சீமானைக் கைது(Seeman Arrest Case) செய்ய சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்தி உத்தரவுக்கு விதிக்கப்பட்ட தடை ரத்து செய்யப்படும் என்று எச்சரித்தனர்.
மேலும் படிக்க : 10 நிமிடம் பேச ’மனப்பாடம்,நடிச்சு பாக்கணும்’: விஜயை சீண்டிய சீமான்
சுமூகமாக செல்ல சீமானுக்கு அறிவுரை
மேலும், வழக்கை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கண்டிப்புடன் கூறினார். விஜயலட்சுமியுடன் சுமுகமாகச் செல்வதற்கான உத்தரவாதத்தை வழங்க வேண்டும் என்று சீமானுக்கு அவர்கள் அறிவுறுத்தி இருக்கிறார்கள்.
====