10 நிமிடம் பேச ’மனப்பாடம்,நடிச்சு பாக்கணும்’: விஜயை சீண்டிய சீமான்

NTK Seeman About TVK Vijay Campaign Speech : பத்து நிமிடம் பேசுவதற்கே சனிக்கிழமை வரைக்கும் மனப்பாடம் செய்ய வேண்டி இருக்கும் என்று, விஜயை சீமான் கலாய்த்து இருக்கிறார்.
Seeman teases Vijay he will memorize until Saturday, just to speak for ten minutes
Seeman teases Vijay he will memorize until Saturday, just to speak for ten minutes
2 min read

சனிதோறும் விஜய் பிரசாரம் :

NTK Seeman About TVK Vijay Campaign Speech : தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கி, 2 மாநாடுகளை நடத்தி இருக்கிறார் நடிகர் விஜய். ஜனநாயகனுக்கு பிறகு வேறு எந்த படத்திற்கும் அவர் புக் ஆகவில்லை. அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள, தவெக முழு வீச்சில் தயாராகி வருகிறது. இந்தநிலையில், தேர்தல் பிரசாரத்தை திருச்சியில் நாளை தொடங்குகிறார் விஜய். ஒவ்வொரு சனிக்கிழமையும் அவர் மக்களை சந்தித்து பிரசாரம் செய்வார் என்று அறிவிக்கப்பட்டு, அதற்கான பயண திட்டம் வகுக்கப்பட்டு இருக்கிறது.

கொள்கை தலைவர்களை பத்தி பேசுங்க :

இந்தநிலையில், ராமநாதபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “

கொள்கை தலைவர் என்று நீ அறிவித்துள்ளவர்களின் கொள்கை பற்றி பேச வேண்டாமா?. காமராஜர் கொள்கை தலைவர் என்றால் யார் காமராஜர் என்று 10 நிமிடம் பேசு. வேலு நாச்சியார் யார் என்று 10 நிமிடம் பேசு.

விஜயை கலாய்த்த சீமான் :

ஆனால், நீ மொத்தமாக பேச அனுமதி கேட்குறது 10 நிமிடம் தான். திருச்சியில் பேசுறதுக்கு 10 நிமிடம் தான் கேட்டு இருக்காங்க. திமுக அரசு பேசுறதுக்கு கூட 5 நிமிடம் கொடுத்து இருக்கிறது. இதுக்கு சனிக்கிழமை வரை மனப்பாடம் பண்ண வேண்டும். நடித்து பார்த்து வந்து பேச வேண்டும்.

வேடிக்கை காட்டும் சிங்கம் :

விஜய் வேட்டைக்கு தான் வெளியே வருவாராம். உண்மையில் நீ வேடிக்கை காட்ட வருகிறாய். ஒரு அடிப்படை தெரிகிறதா? நீ வேடிக்கை காட்ட வருகிற சிங்கமாக இருக்கிறாய். கோட்பாடு அளவில் தான் எதிர்க்கிறேன். உறவு அளவில் அண்ணன், தம்பி இல்லை என்கிறோமா, சண்டை போடுகிறாமா?.

எதிரிகளுடன் மல்லுக் கட்டுகிறேன் :

பெரிய எதிரியுடன் மல்லுக்கட்டி முன்னேறி போகிறேன். எளிய மகன் முன்னேறி வரும் போது அண்ணன் கமலஹாசனை குறுக்கே விட்டார்கள்.

அதனை அடித்து முன்னேறி போகும் போது இவர் வருகிறார். எவனாவது அவர் பேசுவதை உட்கார்ந்து கேட்டு பார்த்து இருக்கிறீர்களா?.

தியேட்டரில் முதல் காட்சி கத்துகிற மாதிரி தான். உனக்கு நண்பா, நண்பி. எனக்கு தம்பி, தங்கை. அவன் எதிர்காலத்திற்கு தான் நான் போராடி கொண்டு இருக்கேன்.

தவெகவின் கொள்கை என்ன? :

பாஜக கொள்கை எதிரி என்றால், உன்னுடைய கொள்கை என்ன? அதை முதலில் சொல்லு. நான் அது எதிரா? இல்லையா? என்று பார்க்கிறேன். முதலில் உன் கொள்கை எதிரியை சொல்லுப்பா. எந்த எந்த அரசியலில் முரண்படுகிறாய்? பாஜவுக்கும், காங்கிரசுக்கும் என்ன கொள்கை வேறுபாடு? பாஜக, காங்கிரஸ், அதிமுக, திமுக கொடியில் வண்ணம் மாறும். எண்ணம் மாறாது.

மேலும் படிக்க : விஜயலட்சுமியுடன் மன்னிப்பு கேளுங்க: சீமானுக்கு உச்சநீதிமன்றம் கேடு

மக்களுக்காகவே எனது கட்சி :

முதல்வராக ஆவது லட்சியம் இல்லை. முதல்வர் ஆகி என்ன செய்ய போகிறேன் என்பது தான் இலக்கு, லட்சியம். ஏழை, பணக்காரன் என வேறுபாடு இல்லாமல் தரமான கல்வி கொடுப்பேன். உலக தரத்தில் கல்வி, மருத்துவம் கொடுப்பேன். இது என் கனவு. படித்தவன், படிக்காதவன் எல்லோருக்கும் அரசு வேலை கொடுப்பேன். படிக்காதவன் இல்லை என்ற நிலையை உருவாக்குவேன்” இவ்வாறு சீமான் உரையாற்றினார்.

============

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in