Selvapperundhakai announced he will step down as Tamil Nadu Congress president after assembly election google
தமிழ்நாடு

”தேர்தலுக்கு பிறகு ராஜினாமா” : செல்வப்பெருந்தகை அதிரடி : ராகுலிடம் தெரிவித்து விட்டதாக பேட்டி... புதிய தலைவர் யார்?

சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலக இருப்பதாக, செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

Kannan

செல்வப்பெருந்தகை

Selvapperundhakai announced he will step down as Tamil Nadu Congress president after assembly election :தமிழக காங்கிரஸ் தலைவராக செல்வப்பெருந்தகை பொறுப்பு வகித்து வருகிறார். கடந்த தேர்தல் ஸ்ரீபெரும்புதூர் தனித் தொகுதியில் இருந்து சட்டமன்றத்திற்கு தேர்ந்து எடுக்கப்பட்டவர். இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு

இவற்றுக்கு வேட்பாளர்களை தேர்வு செய்வதில் பெரும் இழுபறி நிலவியது. அதிக தொகுதிகளை கேட்டுப் பெற்றாலும், வேட்பாளர்களை தேர்வு செய்ய முடியாமல் காங்கிரஸ் திணறியது.

பணம் கொடுத்தால் தான் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவதாக, அக்கட்சியினரே குற்றச்சாட்டை முன்வைத்தது சர்ச்சையை கிளப்பியது.

மேலும் படிக்க : காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு; ஸ்ரீபெரும்புதூர் செல்வப்பெருந்தகை,பென்னாகரம் தமிழ்க்குமரன் போட்டி!

ஸ்ரீபெரும்புதூரில் செல்வப்பெருந்தகை

ஒருவழியாக நேற்று மாலை காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை மீண்டும் போட்டியிடுகிறார்.

பாஜகவை மக்கள் ஏற்க மாட்டார்கள்

மாங்காட்டில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி நிர்வாகிகளை செல்வப்பெருந்தகை சந்தித்தார். பின்னர் பேட்டியளித்த அவர்,

”அதிமுகவின் முகமூடி அணிந்து கொண்டு பாஜக தமிழ்நாட்டுக்குள் இறங்கி இருக்கிறது. தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் ஏமாற மாட்டார்கள்.

தொகுதி மக்களுக்காக பணியாற்றுவேன்

இந்த தலைமுறை பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால், பாஜக முகமூடியோடு இறங்கி இருக்கின்ற அதிமுகவை நாம் தோற்கடிக்க வேண்டும். தேர்தல் முடிவு வந்த பிறகு என்னுடைய முழுமையான பணி ஸ்ரீபெரும்புதூர் தொகுதி மக்களுக்கு மட்டும் தான்.

தலைவர் பதவியில் இருந்து விலகல்

இரு ஆண்டுகள் தமிழக மக்களுக்கு பணி செய்ததுபோல், நாடாளுமன்ற தேர்தலில் நூற்றுக்கு, நூறு வெற்றி பெற்றதுபோல், இந்த தேர்தலிலும் நூற்றுக்கு நூறு வெற்றி பெறுவோம்.

ஒவ்வொரு பதவியில் இருந்து ஒவ்வொருவரும் விலகும்போது, மன நிறையோடு விலகுவார்கள். அதேபோல் நானும் மன நிறைவோடு தான் விலகுகிறேன்.

இனி முழுக்க, முழுக்க ஸ்ரீபெரும்புதூர் தொகுதி மக்களுக்காக உழைக்க தயாராக உள்ளேன். தமிழ்நாட்டு மக்களின் பிள்ளையாக இரண்டு ஆண்டுகள் இருந்தேன்.

ராகுலிடம் தெரிவித்து விட்டேன்

சட்டமன்ற தேர்தல் முடிவிற்குப் பிறகு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ராகுல் காந்தியிடம் தெரிவித்து விட்டேன்" இவ்வாறு அவர் கூறினார்.

செல்வப்பெருந்தகையின் இந்த அறிவிப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

=============