Perambur Railway Station Expansion As Chennai's Fourth Terminal 
தமிழ்நாடு

சென்னையின் 4வது ரயில் முனையம் பெரம்பூர் : தெற்கு ரயில்வே ஒப்புதல்

Perambur Railway Station Expansion : சென்னையின் 4வது முனையமாக பெரம்பூர் ரயில் நிலையத்தை விரிவுபடுத்த தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது

Kannan

சென்னை - ரயில் முனையங்கள் :

Perambur Railway Station Expansion : பெருநகரமான சென்னையில் சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ஆகிய முனையங்கள் உள்ளன. இதில் சென்னையில் இருந்து அதிக அளவில் ரயில்கள் இயக்கப்படுகின்றன. நாள்தோறும் பல்லாயிரக் கணக்கானோர் இந்த முனையத்தை பயன்படுத்தி வருகின்றனர். அதற்கு அடுத்தபடியாக எழும்பூர், தாம்பரம் முனையங்கள் செயல்பட்டு வருகின்றன.

முனையமாகும் பெரம்பூர் ரயில் நிலையம் :

மக்கள்தொகை பெருக்கம், ரயில்களின் எண்ணிக்கை அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால், சென்னைக்கு மேலும் ஒரு முனையம் அவசியமாகிறது. பெரம்பூரை ரயில் முனையமாக(Perambur Railway Terminal) மாற்ற வேண்டும் என்றால், பெரம்பூர் முதல் அம்பத்தூர் இடையே 6.4 கிலோ மீட்டர் தூரத்துக்கு 5 மற்றும் 6வது புதிய ரயில் பாதைகள் அமைக்கப்பட வேண்டும்.இதற்கு தெற்கு ரயில்வே பரிந்துரை செய்த நிலையில், ரூ.182 கோடியில் 5 மற்றும் 6வது புதிய ரயில் பாதைகள் அமைக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்து இருக்கிறது.

பெரம்பூர் கட்டமைப்பு வசதிகள் :

பெரம்பூர் ரயில் நிலையத்தை(Perambur Railway Station) பொருத்தவரை, நீண்ட தூர ரயில்கள் நின்று செல்கின்றன. ஆனால், இங்கிருந்து எந்த ரயிலும் கிளம்பிச் செல்வதில்லை. பெரம்பூரிலும் பெரிய கட்டமைப்பு இல்லா விட்டாலும், வசதிகளை மேம்படுத்தி அதை முனையமாக்கி, பயணிகளுக்கு வசதி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க : ரயில் கிளம்பிய பிறகும் டிக்கெட் புக்கிங்: ’வந்தே பாரத்’ - அறிமுகம்

பெரம்பூர் ரயில் நிலையம் விரிவாக்கம் :

பெரம்பூர் ரயில் நிலையம்(Perambur Railway Station Expansion Budget) ரூ.360 கோடியில் 4-வது புதிய ரயில் முனையமாக மாற்றப்பட உள்ளது. அதன்படி, 2028ம் ஆண்டு இறுதிக்குள் புதிய ரயில் முனைய பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த முனையத்துடன் சேர்த்து, பெரம்பூர்-அம்பத்தூர் இடையே 5, 6-வது புதிய ரயில் பாதைகளும் அமைக்கப்பட உள்ளன. புதிய பாதைகள் செயல்பாட்டிற்கு வரும் போது, அம்பத்தூரில் இருந்து பெரம்பூருக்கு தடையின்றி ரயில்களை எளியதாக இயக்க முடியும். பெரம்பூரில் தற்போது, 4 நடைமேடைகள் உள்ளன. கூடுதலாக 2 நடைமேடைகள் அமைக்கப்படுவதால், அதிக ரயில்களை இயக்க முடியும்.

===