ரயில் கிளம்பிய பிறகும் டிக்கெட் புக்கிங்: ’வந்தே பாரத்’ - அறிமுகம்

Vande Bharat Train Booking Online System 2025: வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்ய புக்கிங் செய்வதில், தெற்கு ரயில்வே அறிமுகம் செய்துள்ள வசதிக்கு பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
Vande Bharat Express Train Booking Online System Change 2025 in Tamil
Vande Bharat Train Booking Online System Change 2025 in Tamil
1 min read

வந்தே பாரத் ரயில் சேவை :

Vande Bharat Train Booking Online System 2025 : இந்தியாவில் அதிவேக ரயில் சேவைகள் நாளுக்குநாள் வரவேற்பை பெற்று வருகிறது. விமானத்திற்கு இணையான வசதி, குறித்த நேரத்தில் சென்றடைதலில் வந்தே பாரத் சாதனை படைத்து வருகிறது. முழுவதும் ஏசி வசதி செய்யப்பட்ட இந்த ரயில்கள் 2019ம் ஆண்டு முதல் இயக்கப்படுகின்றன. மொத்தம் 70 வழித்தடங்களில் 140க்கும் மேற்பட்ட ரயில்கள் பயன்பாட்டில் உள்ளன. தெற்கு ரயில்வேயின் கீழ் 10 வழித்தடங்களில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்கள்(Vande Bharat Express) இயக்கப்பட்டு வருகின்றன.

வந்தே பாரத் முன்பதிவு - புதிய வசதி அறிமுகம் :

இந்நிலையில் தெற்கு ரயில்வே(Southern Railway) மிக முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்களில் கடைசி நேர டிக்கெட்(Vande Bharat Last Time Booking) முன்பதிவை ஊக்குவிக்கும் வகையில் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரயில் புறப்பட்டு அடுத்தடுத்த ரயில் நிலையங்களுக்கு சென்று கொண்டிருக்கும் போது கூட வந்தே பாரத் எக்ஸ்பிரஸில் டிக்கெட் முன்பதிவு ஐஆர்சிடிசி செயலி(IRCTC Rail Connect App) மூலம் பதிவு செய்யலாம். இந்த வசதி ஜூலை 17ம் தேதி முதல் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. சோதனை ஓட்டமாக தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பயணிகள் வரவேற்பை பொறுத்து முழு வீச்சில் செயல்படுத்த ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

ரயில் கிளம்பிய பிறகும் முன்பதிவு வசதி :

இந்த வசதி மூலம் காலி இருக்கைகள் இருந்தால் ரயில் புறப்பட்ட(Train Ticket Booking After Departures) பின்னர் கூட அவற்றை ரயில் பயணிகள் முன்பதிவு செய்து டிக்கெட் பெற முடியும். இதற்கு முன்பு வரை ரயில் புறப்பட்ட பிறகு, அதில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாது. தற்போது இதை மாற்றி புதிய வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. குறிப்பாக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்(Vande Bharat Express) தங்கள் ரயில் நிலையத்திற்கு வருவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பு கூட டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம். காலி இருக்கை இருந்தால்(Ticket Availability), முன்பதிவு கிடைத்து விடும்.

வரவேற்பை பொறுத்து விரிவாக்கம் :

இந்தத் திட்டம் பெரிதும் வரவேற்கக் கூடிய விஷயமாக பார்க்க முடிகிறது. வரவேற்பை பொருத்து, அனைத்து வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்(Vandhe Bharat Express) வழித்தடங்கள் மற்றும் பிற எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் இதை பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டு இருக்கிறது.

===

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in