Southwest Monsoon Deficit source:google,thamizhalai
தமிழ்நாடு

கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவு குறைவு: தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை 20 சதவீதம் சரிவு!

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 20% குறைந்துள்ளது. எல்நினோ தாக்கம் மற்றும் மாவட்ட வாரியான மழை விவரங்கள்.

Kavitha prasanna

Southwest Monsoon Deficit: Tamil Nadu Records 20% Less Rainfall in 6 Years

தென்மேற்கு பருவமழை நிலவரம்

தென்மேற்கு பருவமழை காலம் ஜூன் 1-ம் தேதி தொடங்கி செப்டம்பர் 30-ம் தேதி வரை கணக்கில் கொள்ளப்படுகிறது. வழக்கமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பெறக்கூடிய இயல்பான மழை அளவு 32.8 செ.மீ ஆகும்.

ஆனால், நடப்பாண்டில் செப்டம்பர் 29 வரை 25.8 செ.மீ மழை மட்டுமே கிடைத்துள்ளது. இது இயல்பான அளவை விட 20 சதவீதம் குறைவாகும்.

எல்நினோ தாக்கம் மற்றும் வெப்பநிலை

கடந்த 2020-ம் ஆண்டில் இருந்து கணக்கிடுகையில், நடப்பாண்டில் மிகக் குறைந்த தென்மேற்கு பருவமழை பதிவாகியுள்ளது.

எல்நினோ தாக்கம் காரணமாகவே நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை குறைந்துள்ளது. இதனால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கோடை காலத்தைப் போல கொளுத்தும் வெயில் மற்றும் சுட்டெரிக்கும் வெப்பம் நிலவி வருகிறது.

மாவட்ட வாரியாக மழை அளவு

கோவை, சிவகங்கை, தென்காசி, திருநெல்வேலி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களைத் தவிர, பிற மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை இயல்பை விடக் குறைவாகவே பெய்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் இயல்பான அளவான 8.9 செ.மீ-யை விட அதிகமாக 41.6 செ.மீ மழை கொட்டியுள்ளது.

குறிப்பிட்ட 5 மாவட்டங்களைத் தவிர, மற்ற மாவட்டங்களில் இயல்பை விட 5 சதவீதம் முதல் 64 சதவீதம் வரை மழை பொழிவு குறைந்துள்ளது.

வடகிழக்கு பருவமழை மீது எதிர்பார்ப்பு

தென்மேற்கு பருவமழை பொய்த்த நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அடுத்ததாகத் தொடங்கும் வடகிழக்கு பருவமழையைத் தான் பெரிதும் நம்பியுள்ளது.

இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் இயல்பை விட அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை கணிப்புகள் தெரிவிப்பது ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

இதையும் படிங்க: 6 மாதங்களாகப் பொருட்கள் வாங்காத ரேஷன் கார்டுகள் முடக்கம்? கூடுதல் தகவல்கள் மற்றும் முழு விவரங்கள்!

=======