Speaker invites new ministers for orientation training organized by the Tamil Nadu government.  google
தமிழ்நாடு

தமிழக அரசு சார்ப்பில் "புதிய அமைச்சர்களுக்கு புத்தாக்க பயிற்சி " சபாநாயகர் அழைப்பு

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற அமைச்சர்களுக்கு அரசு சார்பில் புத்தாக பயிற்சிக்கு அரசு சார்பாக அழைப்பானது விடுக்கப்பட்டுள்ளது

Rohini

அமைச்சர்களுக்கு சபாநாயகர் அழைப்பு

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற அமைச்சர்களுக்கு அரசு சார்பில் புத்தாக பயிற்சிக்கு சபாநாயகர் அழைப்பு விடுத்துள்ளார்

இது குறித்து சபாநாயகர் தெரிவித்துள்ளதாவது

இந்த முறையும் 17-ஆவது சட்டமன்ற பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் வருகின்ற 16 முதல் 17 ஆகிய இரண்டு நாட்கள் காலை 10:00 மணி முதல் மாலை 5:30 மணி வரை புத்தாக்க பயிற்சி கலைவாணர் அரங்கம், மூன்றாவது தளத்தில் உள்ள பல்வகை கூட்டரங்கில் நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளார்

அமைச்சர்கள் தவறாமல் கலந்து கொள்ள வலியுறுத்தல்

முதல்வரால் தொடங்கி வைக்கப்பெறும் இந்த புத்தாக்க பயிற்சியில், சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவையில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள், ஆற்றல் வாய்ந்த சட்டமன்ற உறுப்பினராக எவ்வாறு செயல்பட வேண்டும் ,

சட்டமன்ற பேரவை விதிகள், சட்டமன்ற நடைமுறைகள் குறித்தும் பேரவை செயலாளர், சம்பந்தப்பட்ட அரசுத்துறை செயலாளர்கள் மற்றும் சட்டமன்ற நடைமுறைகள் பற்றி நன்கு அறிந்த வல்லுநர்கள் கலந்துகொண்டு பயிற்சி அளிக்க உள்ளார்கள். அதில் புதிதாக ஆட்சி பொறுப்பேற்ற அமைச்சரக்ள் கலந்து கொள்ள வேண்டும் என்று சபாநாயகர் தெரிவித்துள்ளார்

அனைவருக்கும் பயனுள்ளதாக இது இருக்கும் : சபாநாயகர்

சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பெரிதும் பயனளிக்கக்கூடிய இந்த இரண்டு நாட்கள் புத்தாக்க பயிற்சியில், 17-ஆவது சட்டமன்ற பேரவையின் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும். , அதில் பயிற்சி அளிக்கப்படும் அனைத்தும் பயனுள்ளதாகவே இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க : ”ராஜினாமா செய்த 4 அதிமுக அமைச்சர்கள்” : விளக்கம் கேட்டு நோட்டீஸ் : சபாநாயகர் அறிவிப்பு...