தவெகவில் இணைந்த எம்எல்ஏக்கள்
சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மதுராந்தகம் மரகதம் குமரவேல், தாராபுரம் சத்யபாமா, பெருந்துறை ஜெயக்குமார், அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா ஆகிய 4 எம்எல்ஏக்கள், தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் இணைந்தனர்.இது அதிமுக மற்றும் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரப்பரபை ஏற்ப்படுத்தியது
சபாநாயகரிடம் மனு அளித்த அதிமுகவினர்
சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 4 அமைச்சர்களும் , தங்களின் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து உடனடியாக தவெகவில் இணைந்தனர் .
இந்த கட்சித்தாவலுக்கு நடவ்டிக்கை எடுக்க வேண்டும் என கூறி அதிமுக சார்பில் சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டது
சபநாயாகர் விளக்கம் கேட்டு நோட்டிஸ்
இந்தச் சூழலில், எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தது ஏன் என்பது குறித்து 7 நாட்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு 4 பேருக்கும் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
சபநாயகர் தெரிவித்துள்ளதாவது
அதிமுக கொறடா யார் என்பது குறித்த மனுக்கள் மீது ஆய்வு நடந்து வருவதாகவும் மேலும் , சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பே இதுகுறித்து என்ன பரிசீலனை செய்யப்படும் என்பதை அறிவிக்கப்படும் என்று சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
=======================